Tagged: தமிழ்நாடு/நிகழ்வுகள்

stalin kanimozhi 0

உலக நாத்திகர் மாநாடு: கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு

அயல்நாடுகள், வெளிமாநிலங்களைச் சேர்ந்த நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் பங்கேற்கும் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. திராவிடர் கழகம், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நாத்திகர் மையம், பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை இணைந்து 3 நாள்களுக்கு இந்த மாநாட்டை நடத்துகின்றன. இதன் தொடக்க விழா, திருச்சி...

கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்துவோம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு 0

கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்துவோம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தி.மு.க., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் நேற்று இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்து முடங்கி உள்ளது. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள்...

பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : ஆட்டோ, கால் டாக்சிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுகிறது 0

பேருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : ஆட்டோ, கால் டாக்சிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுகிறது

சென்னை: பேருந்து ஊழியர்களின் அறிவிக்கப்படாத திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். போக்குவரத்துகள் இயங்காததால் பயணிகள் மின்சார ரயில்கள், மெட்ரோ உள்ளிட்டவற்றை நாடிச் சென்றாலும், ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை மாலை 6...

திமுக செயல் தலைவராகி ஓராண்டு நிறைவு: ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் வாழ்த்து 0

திமுக செயல் தலைவராகி ஓராண்டு நிறைவு: ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் வாழ்த்து

திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், கு.க.செல்வம் எம்எல்ஏ, துறைமுகம் காஜா ஆகியோர். திமுக செயல் தலைவர் பொறுப்பில் ஓராண்டை நிறைவு செய்துள்ள மு.க.ஸ்டாலினுக்கு துரைமுருகன் உள்ளிட்ட திமுக...

தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை : அரசு விளம்பரம் 0

தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை : அரசு விளம்பரம்

தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என திருச்சியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. போக்‌குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி...

விரக்தியில் பேசுகிறார் கமல்: டி.டி.வி.தினகரன் 0

விரக்தியில் பேசுகிறார் கமல்: டி.டி.வி.தினகரன்

நடிகர் கமல்ஹாசன் விரக்தியில் பேசுகிறார் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். சென்னையில் இருந்து வியாழக்கிழமை இரவு மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமல்லாமல் யாருடைய பிரச்னை குறித்தும் தமிழக அரசுக்கு கவலை இல்லை. நடிகர் ரஜினிகாந்த் பேசும் ஆன்மிக அரசியல் என்பது...

201712200228594457_Actor-Vishal-should-be-present-in-personThe-Court_SECVPF 0

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நடிகர் விஷால் நேரில் ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதையடுத்து நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர்

ஆணவ கொலை 0

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை: ஒருவருக்கு ஆயுள்; மூவரை விடுவித்து நீதிமன்றம்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிரடி உத்தரவிட்டது. மேலும், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், மூவரை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுமலை அருகிலுள்ள...

Tripur_Court_14068 0

சங்கர் ஆணவக் கொலையை நியாயப்படுத்தி பேசிய 2 பேரை அங்கு கூடியிருந்த மக்கள் அவர்கள் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட 6 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் – கௌசல்யா தம்பதியை ஒரு கும்பல் உடுமலைப்பேட்டையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ல் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சங்கர்...

udumalaipettaisankar 0

உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை

திருப்பூர் : உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்துள்ளார். கவுசல்யா தந்தை சின்னசாமிக்கு 2 மரண...