R.K.நகர் தேர்தலுக்காக பணப்பட்டுவாடா நடைபெற்றதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கின.

Daily_News_585247278214_Fotor

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல முக்கிய அதிமுக அம்மா அணி பிரமுகர்களின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எம்எல்ஏ விடுதியில் உள்ள 5 அறைகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஆர்.கே நகர் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு பல கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த காரில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 400 டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>