ADMK மீது புகார் என்றால் கைது கிடையாது, மற்ற கட்சியினர் என்றால் உடனடி கைதா?:தி.மு.க.தலைவர்மு.கருணாநிதி

Karu_21

கேள்வி :- ஜெயலலிதாவை எதிர்த்து பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஆக்னஸ் என்பவரை வேறு ஏதோ காரணம் சொல்லிக் கைது செய்திருக்கிறார்களாமே?

ஜெயலலிதாவை கடந்த தேர்தலில் பா.ம.க. சார்பில் எதிர்த்துப் போட்டியிட்டது மாத்திரமல்ல; பட்டினப்பாக்கத்தில் “டாஸ்மாக்” கடையை மூடக் கோரி அந்தப் பகுதி மகளிரோடு இணைந்து போராட்டமும் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. இந்த “டாஸ்மாக்” கடையால் ஏற்பட்ட பிரச்சினையில்தான் நந்தினி என்ற பெண்ணும், முதியவர் ஒருவரும் தங்கள் உயிரையே பலி கொடுக்க நேர்ந்தது. ஆனால் ஆக்னஸ் மீது, குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவ தாகக் கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குத் தொடர்ந்து இப்போது கைது செய்திருக் கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில், பா.ம.க. பிரமுகரால் எவ்வாறு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தர முடியும்? அதுவும் குடிசை மாற்று வாரிய வீடு வாங்கிட ஒரு கோடி ரூபாய் தருவதற்கு யார் முன்வருவார்கள்? ஆனால் இவரைக் கைது செய்திருக்கிறது அ.தி.மு.க. போலீஸ். ஆனால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் பலருக்கு வேலை தருவதாகக் கூறி 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்தது பற்றி நீதிமன்றத்தில் காரைக்குடி சுப்பையா என்பவர் வழக்கே பதிவு செய்துள்ளார். அதுபற்றி போலீசாரை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அ.தி.மு.க. மீது புகார் என்றால் கைது கிடையாது, மற்ற கட்சியினர் என்றால் மட்டும் இந்த ஆட்சியிலே உடனடியாகக் கைதா? மருமகள் உடைத்தால் மட்டும் பொன்குடம்; மாமியார் உடைத்தால் மண் குடமா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>