92 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில்வே மற்றும் பொது பட்ஜெட்டை இணைக்க மத்திய அரசு திட்டம்

கடந்த 1924-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் ரெயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. அன்றைக்கு பட்ஜெட்டில் 70 சதவீதம் அளவுக்கு ரெயில்வே இருந்தது. ஆனால், தற்போது நாட்டின் பட்ஜெட்டில் 15 சதவீதம் மட்டுமே ரெயில்வே வசம் உள்ளது.

புதுடெல்லி,

கடந்த 1924-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் ரெயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. அன்றைக்கு பட்ஜெட்டில் 70 சதவீதம் அளவுக்கு ரெயில்வே இருந்தது. ஆனால், தற்போது நாட்டின் பட்ஜெட்டில் 15 சதவீதம் மட்டுமே ரெயில்வே வசம் உள்ளது. தற்போது இந்திய ரெயில்வே மிகப்பெரிய வருவாய் பற்றாக்குறை பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில், ரெயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்வதால் ஏற்படும் பணிச்சுமையை குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இரண்டு பட்ஜெட்டுகளையும் இணைப்பது பற்றி மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ஏற்கனவே மத்திய நிதி அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். 7-வது ஊதியக்குழு பரிந்துரையால் ரூ.30 ஆயிரம் கோடிக்கு ரெயில்வே துறைக்கு இந்த ஆண்டு கூடுதல் நிதி்ச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கடிதத்தை பார்த்த பிறகு நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராயும் இந்த முடிவை பரிந்துரை செய்துள்ளார். இவ்வாறு இரண்டு பட்ஜெட்டையும் இணைப்பதால் மத்திய அரசிடம் இருந்து பட்ஜெட் தொகையில் ஆதரவை பெறுவதற்காக ரெயில்வே செலுத்தி வரும் பங்காதாய தொகையை செலுத்த வேண்டியிருக்காது.

எனினும், ரெயில்வே அமைச்சகத்திடம் இதுகுறித்து முழுமையாக விவாதித்து நிறை குறைகளை ஆலோசித்த பிறகே இரண்டு பட்ஜெட்டையும் இணைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என நிதிச் செயலாளர் அசோக் லவாசா தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>