71 சதவிகித காற்று மாசுபாட்டுக்கு 100 நிறுவனங்களே காரணம்.

greenhouse-gas-emissions_11578

காற்றை மாசுப்படுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் 71 சதவிகிதம், வெறும் 100 நிறுவனங்களில் இருந்து மட்டுமே வெளியாகி இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்வில் வெளிவந்துள்ளது.

வழக்கமாக தேசிய அளவில் பசுமை இல்ல வாயுக்களில் (Green House Gases) வெளியீடு கணக்கிடப்படும். ஆனால், இந்த ஆய்வில் படிவ எரிபொருள் (Fossil Fuel) உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பான்மையாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்மூலம் தான் 1988லிருந்து தற்போது வரை காற்றில் கலந்துள்ள பசுமை வீடு வாயுவில் 71 சதவிகிதம் பங்கு 100 நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை லாபம் நோக்கில்லாமல் செயல்படும் கார்பன் வெளியேற்றத்தைக் கணக்கிடும் அமைப்பு நடத்தியுள்ளது.

புவிவெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் மற்றும் கடல்நீர்மட்டம் உயர்வு போன்றவற்றுக்கெல்லாம் பசுமை இல்ல வாயுக்கள் முக்கிய காரணங்களாக உள்ளன. பருவநிலை மாற்றத்தைத் தடுக்கவே பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அதில் சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் உலகின் 100 நிறுவனங்கள் மட்டுமே 71 சதவிகித மாசுபாட்டுக்குக் காரணமாக உள்ளன என்ற தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>