7 முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்கும் விவகாரம் புதியஉத்தரவு :அமெரிக்க அதிபர் டிரம்ப்

சிரியா அகதிகள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையிலும், 7 முஸ்லீம் நாட்டு மக்களுக்கு விசா வழங்குவது தொடர்பான எனது உத்தரவுக்கு தடை விதித்த நிலையில் புதிய குடியுரிமை உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும்.

சிரியா அகதிகள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையிலும், 7 முஸ்லீம் நாட்டு மக்களுக்கு விசா வழங்குவது தொடர்பான எனது உத்தரவுக்கு தடை விதித்த நிலையில் புதிய குடியுரிமை உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும்.

வாஷிங்டன்: சிரியா உள்பட 7 முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்குவது தொடர்பான நடைமுறையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, யேமன் ஆகிய 7 முஸ்லீம் நாடுகளுக்கு 90 நாட்கள் அமெரிக்க விசா வழங்க அதிபர் டிரம்ப் ஜனவரி 27ல் தடை விதித்தார். சியாட்டில் நீதிமன்றம் அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் மேல்முறையீட்டு நீதிமன்றம் எண் 9ல் மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுவை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து கீழ்நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்க மறுத்து விட்டது. இதனால் அதிபர் டிரம்ப் முடிவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்க தலைமை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிபர் டிரம்ப்பும் அவ்வாறுதான் கூறினார். ஆனால் நேற்று அதிரடியாக குடியுரிமை தொடர்பாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ெதரிவித்துள்ளார். இதுபற்றி வெள்ளை மாளிகையில் அவர் கூறியதாவது: சிரியா அகதிகள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையிலும், 7 முஸ்லீம் நாட்டு மக்களுக்கு விசா வழங்குவது தொடர்பான எனது உத்தரவுக்கு தடை விதித்த நிலையில் புதிய குடியுரிமை உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும்.

எனது உத்தரவு முடக்கப்பட்டது மிகவும் மோசமானது என்று நினைக்கிறேன். அதை புதிய நிர்வாக உத்தரவு சரிசெய்யும். நீதிமன்ற உத்தரவு பாதிக்காதபடி என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக உலகிலேயே மிகச்சிறந்த வக்கீல்கள் பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.அரசு எந்திரம் நன்றாக இயங்குகிறது

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வாரத்தில் 4 வது முறையாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனது நிர்வாகம் நன்கு சரி செய்யப்பட்ட எந்திரம் போல் சிறப்பாக செயல்படுகிறது. பத்திரிகைகளில் வருவது போல் வெள்ளை மாளிகையில் எந்தவித குழப்பமும் இல்லை. ஆனால் பத்திரிகைகள் எங்கள் மீது கோபத்தில் உள்ளன. டிவி மற்றும் செய்தித்தாள்களை பார்த்தால் எனது நிர்வாகத்திற்கு எதிரான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆனால் நாங்கள் மிகச்சிறந்த அணியாக செயல்படுகிறோம். மிகவும் கடினமாக உழைக்கிறோம். இதனால் மிகச்சிறந்த முறையில் முன்னேறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.1 லட்சம் பேர் அடங்கிய தேசிய பாதுகாப்பு படை அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக, 1 லட்சம் பேர் அடங்கிய தேசிய பாதுகாப்பு படை அமைக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>