6 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

2017-04-09-17-11-27

செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகனம் ஓட்டுனர் அசல் உரிமத்தை வாகன ஓட்டிகள் அனைவரும் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இதில், நாளை மறுநாள்(6 ஆம் தேதி) முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன ஓட்டிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், அசல் ஓட்டுநர் உரிமத்தை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டியது மக்களின் பொறுப்பு எனவும், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நீட்டிக்க முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>