Monthly Archive: March 2017

PicsArt_03-31-09.39.45 0

நமது மீனவர்களை நமது கடற்படையினரே தாக்கிய கொடூரம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடுக்கடலில் தாக்குதல் நடத்தியது மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகதாபட்டினத்தில் இருந்து 174 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 16 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த...

PicsArt_03-31-09.27.47 0

டெல்லியில் போராடுபவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள், மாணவர்கள் போராட்டம்

| பெரம்பலூர்: வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும்...

unnamed (3) 0

வழக்குகளில் சிக்கிய வாகனங்களின் உதிரி பாகங்கள் திருடி விற்ற 2 எஸ்ஐ, ஒரு ஏட்டு டிஸ்மிஸ்

மதுரை: வழக்குகளில் சிக்கிய வாகனங்களின் உதிரி பாகங்களை திருடி விற்ற 2 எஸ்ஐகள், ஒரு ஏட்டு என 3 பேரை மதுரை எஸ்.பி.விஜயேந்திர பிதாரி பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விபத்து, திருட்டு, கொள்ளை சம்பவங்களில் சிக்கிய வாகனங்களை போலீசார் மீட்டு...

Jakkamna 0

இலங்கை அமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு படகுகளை விடுவிக்கும் திட்டம் எதுவும் இல்லை

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களின் 143 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டன. ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் 45 படகுகள் சேதமடைந்துள்ளன. 18 படகுகள் பயனின்றி முழுவதும் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில்...

download 0

கிரானைட் குவாரிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

மேலூர்: மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் கலெக்டர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் பல்லாயிரம் கோடி முறைகேட்டில் ஈடுபட்டதால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. கிரானைட் அதிபர்கள்...

unnamed (1) 0

கேரள, தமிழக, மத்திய அரசுகளை கண்டித்து பவானி தடுப்பணை தடுப்புக்குழு சென்னிமலையில் உண்ணாவிரதம்

ஈரோடு: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரள அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தடுப்பணை கட்டுவதற்கு தடையாணை பெறாத தமிழக அரசை கண்டித்தும் பவானி தடுப்பணை தடுப்புக்குழு மற்றும் கீழ்பவானி பாசனத்துக்குட்பட்ட எல்-9, 10 மற்றும் 11...

images 0

தண்ணீரின்றி எலுமிச்சை மரங்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் இறந்தார்.

புளியங்குடி: வாசுதேவநல்லூர் அருகே தண்ணீரின்றி எலுமிச்சை மரங்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் இறந்தார். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தேசியம்பட்டியைச்சேர்ந்த விவசாயி சம்மனசு(56). இவர் தனது 4 ஏக்கர் நிலத்தில் 230 எலுமிச்சை மரங்கள் வளர்த்து வந்தார். மரங்களில் காய் பிடித்து வந்தநிலையில் போதிய தண்ணீர்...

unnamed 0

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்குவளை அருகே கருப்பு கொடியேந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை எந்த ஊரில் செயல்படுத்த போகிறோம் என்பதை குறிப்பிடாமல் கொல்லைப்புறம் வழியாக திருட்டுத்தனமாக செயல்படுத்த முயற்சி செய்யும்...

ஜக்கம்மா செய்தி 0

சிவப்பாக மாறிய திருச்செந்தூர் கடல்: பக்தர்கள் கடும் பீதி

திருச்செந்தூர் : சென்னையில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் பரவியதை போல திருச்செந்தூர் கடலிலும் நேற்று திடீரென எண்ணெய் படலம் உருவாகி கடல் சிவப்பு நிறமாக மாறியது. இதனால் பக்தர்கள் குளிக்க தயங்கி, பீதி அடைந்தனர். திருச்செந்தூருக்கு தினமும் ஆயிரக்கணக்கில் வரும் பக்தர்கள் கடலில்...

ஜக்கம்மா செய்தி 0

கோதுமை, துவரம் பருப்புக்கு 10% இறக்குமதி வரி: மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: கோதுமை மற்றும் துவரம்பருப்புக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. கோதுமைக்கு விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத இறக்குமதி வரியை கடந்த டிச., 8ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது....