2017 – 18-ம் நிதி ஆண்டில் வரிச் சலுகைகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது : அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

|

PicsArt_03-16-02.11.15

சென்னை: வரும் நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக இருக்கும் என பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழக அரசின் வருவாய் வரவுகள் ரூ.1,59,363 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வரும் நிதி ஆண்டில் வருவாய்ச் செலவினங்கள் ரூ.1,75,293 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் 2017 – 18-ம் நிதி ஆண்டில் வரிச் சலுகைகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் மதிப்புக்கூட்டு வரிக்கு பதில் சரக்கு மற்றும் சேவைவரி வரும் ஆண்டில் மலுக்கு வர உள்ளதை சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக தற்போதைய பட்ஜெட்டில் வரிச்சலுகை ஏதும் அறிவிக்க்கப்படவில்லை என்றார். அரசு ஊழியர்களுக்கான ஊதிய செலவுக்கு பட்ஜெட்டில் ரூ.46,332 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய செலவுக்கான நிதிநிலை ரூ.20,577 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் மின்சார மானியம், கல்வி உதவித் தொகை வகையில் செலவு ரூ.72,616 கோடியாக இருக்கும் என்றார். உபரிகாற்றாலை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல சிறப்பு வழித்தடம் அமைக்கப்படும் என்றார். ரூ.1,508 கோடி செலவில் 4 வழிச்சாலைகள் தரம் உயர்த்தப்படும் என்றார். சாலைகள் அகலப்படுத்தும் பணி, புதிய பாலங்கள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>