2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு: தமிழக அரசு

ஊராட்சிகளில் 99,335 வார்டுகள், ஒன்றியக் குழுக்களில் 6,471 வார்டுகள், மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டுகள் உள்ளன.

ஊராட்சிகளில் 99,335 வார்டுகள், ஒன்றியக் குழுக்களில் 6,471 வார்டுகள், மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டுகள் உள்ளன.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அக்டோபரில் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் திமுக, பாமக ஆகிய இரு கட்சிகளும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரனும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருந்ததாவது:-

ஊராட்சிகளில் 99,335 வார்டுகள், ஒன்றியக் குழுக்களில் 6,471 வார்டுகள், மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டுகள் உள்ளன. தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எல்லை மறுவரையரை பணிகள் மிகப் பெரிய நடவடிக்கையாகும். வார்டு மறுசீரமைப்பு பணிகளை அக்டோபர் மாதத்துக்கு முன்பாக முடிக்க முடியாது.

1,06,459 வார்டுகளையும் குறுகிய காலத்தில் மறுவரை செய்வது இயலாத காரியம். ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மூன்றில் ஒருபங்கு என்பது, 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும்.

39 மக்களவைத் தொகுதிகள், 234 சட்டப் பேரவைத் தொகுதிகள் மறுவரையரைக்கு சில ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால், உள்ளாட்சிகளில் மூன்று மாதத்தில் மறுவரையரை செய்ய முடியாது என கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையரை, சுழற்சி முறையில் வார்டுகள் ஒதுக்குவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 1-க்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>