20 நிமிடத்திற்கு ஒரு இடைவெளி

பெற்றோர்கள் அனைவருமே தங்கள் குழந்தைகள் படிப்பில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த ஆசை சரியானதுதான். ஆனால் தங்கள் குழந்தைக்கு இருக்கும் திறமையை அடிப்படையாக வைத்தே அவர்கள், தங்கள் கனவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்தக் குழந்தைகள் பாடங்களைப் புரிந்து கொள்வதில் ஏதாவது சிக்கலோ, பார்வைக் கோளாறோ, மூளை வளர்ச்சி தொடர்பான ஏதாவது பலகீனங்களோ இருந்தால்… அவர்களால் நன்றாகப் படிக்க முடியாது. அந்த குறைபாட்டைக் கண்டறிந்து, சிகிச்சை செய்தால்தான் அவர்களுடைய படிப்புத் திறன் மேம்படும்.
எந்தப் பாதிப்புகளும் இல்லாத சராசரி குழந்தைகள் நன்றாகப் படித்து, அதிக மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?creative
இரவிலோ, அதிகாலையிலோ குழந்தைகள் படிக்க அமர்ந்தால்… அவர்கள் தொடர்ந்து அதிக நேரம் படிப்ப வேண்டும் என்று எல்லா பெற்றோரும் விரும்புகிறார்கள். அந்த எண்ணம் சாரியானதல்ல. படிக்கும்போது அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும் விதத்தில், இடைவேளை கொடுப்பதும் அவசியமாகும். 20 நிமிடங்கள் படித்ததும், 5 நிமிடங்கள் ஓய்வளிக்க வேண்டும். பாட்டுக் கேட்பது, ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவது, வீட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவது, creativeஎழுந்து போய் தண்ணீர் பருகிவிட்டு வருவது போன்ற ஏதாவது ஒரு பொழுதுபோக்குக்கு அந்த நிமிடங்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு தொடர்ந்து படிக்க வேண்டும். சிறுவர் – சிறுமியர்களை எந்த வேலையையும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து செய்ய வற்புறுத்தக்கூடாது என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அதனால்தான் சிறுவர்களின் பாடப்பிரிவு வகுப்பு நேரத்தை நாற்பது நிமிடங்களாக வகுத்திருக்கிறார்கள். வகுப்பாசிரியர் ஒருவருக்கு நாற்பது நிமிடங்கள் பாட நேரமாக ஒதுக்கப்படுகிறது. முதல் 10 நிமிடங்கள் பாடத்தை பற்றிய அறிமுகம். அடுத்த இருபது நிமிடங்கள் எழுதுவது, கடைசி பத்து நிமிடங்கள் தொகுப்புரை என்று வகுத்திருக்கிறார்கள்.
குழந்தைகளை படிக்க வைத்ததும் தன் வேலை முடிந்தது என்று பெற்றோர் கருதி விடக்கூடாது. அவர்கள் படிப்பதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்காமல் என்ன படிக்கிறார்கள், என்ன முறையில் படிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். தினமும் வகுப்பில் எடுத்த பாடத்தை வீட்டில் படிக்கச் செய்ய வேண்டும். ஹோம் ஒர்க் செய்வதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.
எல்லா நேரங்களிலும் கேள்விகளுக்கு creative விடையாக பாடப்புத்தகங்கள் மட்டுமே இருக்காது. பாடல், கவிதை போன்றவைகள் படிக்கும் போது பாடப்புத்தகத்தில் இருப்பதையும், தற்போதைய ஜனரஞ்சக இதழ்களில் இருப்பதையும் ஒப்பிட்டுக் காட்டுங்கள். எந்த ஒரு மொழியைப் படிப்பதற்கும் பாடப்புத்தகங்கள் மட்டும் போதாது. அதைத் தவிர்த்து அந்த மொழி செய்திப் பத்திரிகைகள், இதழ்கள் போன்றவைகளையும் படித்து, அந்த சொற்களையும் பிரயோகப்படுத்த ஊக்கம் அளியுங்கள்.
கணக்குப் பாடம்தான் கடினம் என்று ஏராளமான மாணவர்கள் சொல்கிறார்கள். அதற்கு காரணம், அவர்கள் அந்தப் பாடத்தை ஆசிரியர் நடத்தும்போது முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. ஆசிரியர் ஒவ்வொரு ஆண்டும் அந்தக் கணக்குகளை நடத்துவதால் அவர் மனப்பாடமாக கணக்கை நடத்துவதில் வேகத்தைக் காட்டுவார். மாணவர்கள் நிலையில் இருந்து அவர்களுக்கு அது புரிந்ததா என்று நினைத்துப் பார்க்க சில ஆசிரியர்களுக்கு நேரம் இல்லை. அதனால், புரியாமல் வீட்டிற்கு வரும் மாணவர்கள் அடுத்து டியூசன் செல்வார்கள். அங்கும் அந்த நிலையே நீடிக்கிறது. கணக்கு பாடத்தைப் பொறுத்தவரையில் முதலில் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். பின்பு, திரும்பத் திரும்ப அதை செய்து பார்க்க வேண்டும். இந்த இரண்டு நிலையையும் முழுமையாகக் கடைபிடித்தால் மட்டுமே கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்க முடியும். இதை, மாணவர்களுக்கு பெற்றோர் எடுத்துச் சொல்ல வேண்டும்.
தினமும் காலையும், மாலையும் படிப்பதற்கு நேரம் ஒதுக்கச் செய்யுங்கள். அது, அதிகமான நேரமாக இருக்க வேண்டியது இல்லை. இரவு இரண்டு மணி நேரம், காலையில் இரண்டு மணி நேரம் என்று நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம். அந்த நேரத்திலே ஹோம் ஒர்க்கையும் முடித்துக் கொள்ளச் செய்ய வேண்டும். வகுப்பறையில் நன்றாக பாடத்தைக் கவனித்தால், வீட்டிற்கு வந்து அதை பத்து நிமிடங்கள் படித்தாலே போதுமானது.
பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு அடிக்கடி செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களிடமும், சக மாணவர்களிடமும் பேசி, மகனுடைய படிப்பின் போக்கை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் குழந்தைகள் சுமாராகவே படிப்பவர்களாகவே இருந்தால்… பள்ளியில் போய் நீங்கள் விசாரிக்கும் நாட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டுமானால் அவர்கள் தினமும் அரை மணி நேரமாவது உடலை வருத்தி விளையாட வேண்டும். விளையாட்டுத் திறனை வளர்க்கவும், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் விளையாட்டு அவசியமாகும். அதனால், விளையாடுவதற்குரிய வாய்ப்புகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>