18 வயது நிரம்பியவர்களை சன்னியாசம் அல்லது குடும்ப வாழ்க்கைக்கு கட்டாயப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு

Tamil-Daily-News_28038752080

சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் 2 பெண்களிடமும் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணை அறிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம், ஈஷா மையத்தில் உள்ள 2 மகள்களையும் பார்க்க பெற்றோரை அனுமதிக்க உத்தரவிட்டது. மேலும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாக இரண்டு பெண்களும் விசாரணயின் போது கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களது தாய் சத்யஜோதி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கும் முடித்துவைக்ப்பட்டது.

VISHNU  LAXMI

முன்னதாக ஈஷா யோக மையத்தில் தங்கியிருக்கும் கீதா, லதா ஆகிய சகோதரிகளிடம் மாவட்ட நீதிபதி நடத்திய விசாரணையில் இருவரும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஈஷா மையத்தில் தங்கியிருப்பதாக கூறியுள்ளனர். இவர்களிடம் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் நடத்திய விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பெண்களின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டார். தீர்ப்பில் மகள்கள் மனம் மாறினால் பெற்றோர் அழைத்துச் செல்லலாம். ஆனால் 18 வயது நிரம்பியவர்களை சன்னியாசம் அல்லது குடும்ப வாழ்க்கைக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என கூறியுள்ளார்.

201608110409337504_Isha-Yoga-Center-the-countys-chief-judge-in-the-trial-of-4_SECVPF

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>