154 பந்துகள், ஒரு ரன் கூட இல்லை – ஆஸ்திரேலிய அணி ‘சாதனை’!

154 பந்துகள், ஒரு ரன் கூட இல்லை - ஆஸ்திரேலிய அணி 'சாதனை'!

154 பந்துகள், ஒரு ரன் கூட இல்லை – ஆஸ்திரேலிய அணி ‘சாதனை’!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலகில் மிகச் சிறந்த அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணியினர், நேற்று மற்றொரு ‘சாதனையை’ நிகழ்த்தியிருக்கின்றனர் .

தோல்வியைத் தவிர்க்க முயன்ற ஆஸ்திரேலிய அணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது ( படத்தில் ஆஸ்திரேலிய ஆட்டக்காரர் ஸ்டீவ் ஓ’கிஃபீ)
தாங்கள் நினைவில் வைத்துப் பெருமைப்படும் சாதனையல்ல அது – 154 பந்துகளை ஒற்றை ரன் கூட எடுக்காமல் கையாண்ட ‘சாதனையை’ அவர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர்.
டெஸ்ட் போட்டியென்றாலே மெல்லத்தான் நகரும் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இது ஆமை வேகத்தைத் தாண்டி நத்தை வேகத்தில் ஆடிய ஆட்டம்தான்.
இந்த ‘சாதனையை’ ஆஸ்திரேலிய அணியினர், இலங்கையில் தொடங்கிய டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் டெஸ்டில் தோல்வியைத் தவிர்க்க செய்தனர் . ஆனாலும் தோல்வியை அவர்கள் தவிர்க்க முடியவில்லை.

வெற்றி பெற்ற இலங்கை அணி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில்
பல்லேகலவில் நடந்த இந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 106 ரன் வித்தியாசத்தில், வெற்றி பெற்றது.
இலங்கை ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வெல்வது இது இரண்டாவது முறை மட்டுமே.
இலங்கையில் நடக்கும் இந்த மூன்று டெஸ்ட் தொடரின் அடுத்த டெஸ்ட் காலியில் வியாழனன்று தொடங்குகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>