13 லட்சம் ஏக்கர் சம்பா நெல் சாகுபடிக்காக கல்லணை திறப்பு

வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் உள்ளிட்ட கிளை ஆறுகளில் 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. விதை நெல் மற்றும் மலர்களை தூவி தமிழக அமைச்சர்கள் மற்றும் நான்கு மாவட்ட ஆட்சியர்களும் கல்லணை நீரை வரவேற்றனர்.

வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் உள்ளிட்ட கிளை ஆறுகளில் 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. விதை நெல் மற்றும் மலர்களை தூவி தமிழக அமைச்சர்கள் மற்றும் நான்கு மாவட்ட ஆட்சியர்களும் கல்லணை நீரை வரவேற்றனர்.

சேலம்: காவிரி பாசன பகுதியில் 13 லட்சம் ஏக்கர் சம்பா நெல் சாகுபடிக்காக கல்லணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் வந்தடைந்ததால் பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது. வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் உள்ளிட்ட கிளை ஆறுகளில் 9,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. விதை நெல் மற்றும் மலர்களை தூவி தமிழக அமைச்சர்கள் மற்றும் நான்கு மாவட்ட ஆட்சியர்களும் கல்லணை நீரை வரவேற்றனர்.

தண்ணீர் திறக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் இந்த நீர் பாசனத்திற்கு போதுமானதாக இருக்காது என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 25,000 கனஅடி தண்ணீர் எடுத்தால் மட்டுமே சம்பா சாகுபடி செய்து டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் முன்னேற்றப்படும் எனவும் விவசாயிகள் கூறினர். தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத்தர வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>