ஹிமாச்சல பிரதேச முதல்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

virbhadra-singh

புதுடெல்லி: ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீர பத்ர சிங் மற்றும் அவர் மனைவி ஆகியோர் வருமானத்திற்கு மீறி சொத்து குவித்ததாக சி.பி.ஐ 2015ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை தள்ளுபடி செய்ய முதல்வர் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும், ஹிமாச்சல பிரதேச நீதிமன்றம், முதல்வர் வீரபத்ர சிங்கை கைது செய்ய சி.பி.ஐ க்கு விதித்த தடையையும் தள்ளுபடி செய்தது. 2015ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதியில் காங்கிரஸ் தலைவரும், ஹிமாச்சல பிரதேச முதல்வருமான வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவி மீது ஊழல் தடுப்பு பிரிவில், சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>