ஸ்டலினுடன் த.மா.க. தலைவர் ஜி.கே.வசனுடன் சந்திப்பு

2016-19-9-14-54-29j

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்கெட்டு உள்ளது என்றும் கர்நாடகத்தில் இயல்பு நிலை திரும்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக இன்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், ஒருமித்த கருத்து ஏற்பட்டால் திமுகவுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் என்று கூறியிருந்தார்.

தமிழகம் சட்டம்-ஒழுங்கு நிலவரம் மற்றும் காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஸ்டாலினுடன் விவாதித்ததாக வாசன் குறிப்பிட்டுள்ளார். விரைவில் திமுக தலைவர் கருணாநிதியையும் சந்தித்து பேசவுள்ளதாகவும் ஜி.கே.வாசன் தகவல் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>