வேளாங்கண்ணி திருவிழா நாளை கொடியேற்றம்: பக்தர்கள் குவிகின்றனர்

Daily_News_4183880090714

நாகை: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா நாளை (29ம் தேதி) மாலை 6 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. முன்னதாக பேராலய முகப்பில் இருந்து புனித கொடி ஊர்வலம் புறப்பட்டு மீண்டும் முகப்பை அடைகிறது. கொடி மரத்தில் அன்னையின் திருக்கொடியை பேராலய அதிபர் ஏற்றி வைக்கிறார். அப்போது, கண்ணை கவரும் வாண வேடிக்கை நடைபெறும். பின்னர் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. விழா நிறைவடையும் வரை தினந்தோறும் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, கொங்கணி உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும். தினந்தோறும் இரவு 8 மணி அளவில் மாதாவின் திருத்தேர் பவனியும் நடக்கிறது.

விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்து குவிந்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து வருகின்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்தாண்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கிறது. பக்தர்களின் கூட்டத்தால் இப்போதே வேளாங்கண்ணி விழாக்கோலம் பூண்டுள்ளது. அறை பதிவு செய்யும் இடம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அங்கு ஏராளமான பக்தர்கள் படுத்து ஓய்வெடுக்கிறார்கள். அறை கிடைக்காதவர்கள் புனித ஆரோக்கியமாதா மேல்நிலைப்பள்ளி, பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சை, பூண்டி மாதா கோயில், ஓரியூர், பட்டுக்கோட்டை, சிதம்பரம், புதுவை, சென்னை, காரைக்கால், நாகூர், நாகை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு விழாக்கால சிறப்பு பஸ்கள் வரும் செப்டம்பர் 12ம் தேதி வரை இரவு, பகலாக இயக்கப்படும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>