வேந்தர் மூவீஸ் மதனுக்கு ஜூன் 20 வரை காவல் நீட்டிப்பு

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவீஸ் மதனின் நீதிமன்ற காவலை ஜூன் 20 வரை நீட்டித்து சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Mathan_jakkamma
எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி கூறி 123 மாணவர்களிடம் 84.24 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக வேந்தர் மூவீஸ் மதன் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப் பிரிவு காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

தலைமறைவாக இருந்த மதன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். பின் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

இந்நிலையில், மோசடி செய்த தொகையை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாக, அமலாக்கப் பிரிவினர் மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மதன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரது நீதிமன்ற காவலை ஜூன் 20 வரை நீட்டித்து நீதிபதி அருள் முருகன் உத்தரவிட்டார்.

இதற்கிடையில் ஜாமீன் கோரி மதன் தரப்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை 8ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>