வேதாரணீஸ்வர் கோவில் தேரோட்ட பிரச்னை: அம்பேத்கர் சிலையை அகற்றுவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

தேரோட்டம் நடைபெறும் வியாழன்கிழமை(மார்ச் 9) மட்டும் சிலையை அங்கிருந்து அகற்றி, மறு தினம் அதே இடத்தில் நிறுவ சம்மதமா? என அரசு தரப்பை பார்த்து கேட்டனர். அதற்கு அரசு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தேரோட்டத்திற்காக அகற்றும் நோக்கில் சிலையை தொடுவது கூட ஒரு வகை தீண்டாமை என்றார்.

தேரோட்டம் நடைபெறும் வியாழன்கிழமை(மார்ச் 9) மட்டும் சிலையை அங்கிருந்து அகற்றி, மறு தினம் அதே இடத்தில் நிறுவ சம்மதமா? என அரசு தரப்பை பார்த்து கேட்டனர். அதற்கு அரசு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தேரோட்டத்திற்காக அகற்றும் நோக்கில் சிலையை தொடுவது கூட ஒரு வகை தீண்டாமை என்றார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு வேதாரணீஸ்வரர் திருக்கோவில், 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு தேரோட்டம் வியாழக்கிழமை (மார்ச் 9) நடைபெறுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் கோவில் தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. அப்போது தேர் செல்லும் வழியில் உள்ள அம்பேத்கரின் சிலை இடையூறாக இருப்பதால் சிலையை அகற்ற வேண்டும் என, கோயில் நிர்வாகத்தினர் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர்.
இதையறித்த அங்குள்ள அமைப்புகள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 4-ஆம் தேதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் உரிய முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி சத்தியராசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது.
பின்னர் தேரோட்டம் நடைபெறும் வியாழன்கிழமை(மார்ச் 9) மட்டும் சிலையை அங்கிருந்து அகற்றி, மறு தினம் அதே இடத்தில் நிறுவ சம்மதமா? என அரசு தரப்பை பார்த்து கேட்டனர். அதற்கு அரசு தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தேரோட்டத்திற்காக அகற்றும் நோக்கில் சிலையை தொடுவது கூட ஒரு வகை தீண்டாமை என்றார்.
மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், இந்த பிரச்னையை சாதி அடிப்படையில் அணுகியது துரதிருஷ்டமானது என வேதனை தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, அதில் கிடைக்கும் பெருபான்மை கருத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க நாகை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>