வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவி செய்யுங்கள்அமீர்கான் :கதிர்

201707300831444601_Aamir-Khan-appeals-his-fans-to-support-the-victims-of-Assam_SECVPF

மும்பை: அசாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் உடைமைகளை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். மேலும், அசாம் மாநிலத்தில் 79 பேரும், குஜராத்தில் 72 பேரும் வெள்ளத்தில் சிக்கி பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அசாம், குஜராத்தில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவுமாறு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் நடிகர் அமீர்கான் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கூறியதாவது:- குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களின் சில பகுதிகள் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மக்கள் இக்கட்டான நிலையை சந்தித்து வருகிறார்கள். ஏராளமானோர் தங்கள் உயிரை இழந்துவிட்டனர். இயற்கைக்கு முன்பாக நாம் அனைவரும் ஆதரவற்றவர்களாக இருக்கலாம். ஆனால், நமது சகோதர, சகோதரிகளுக்கு நம்மால் இயன்றதை நிச்சயம் செய்ய முடியும். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து குஜராத், அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்வோம். இரு மாநில முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை அளிப்போம். இவ்வாறு அதில் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

Source:

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>