வெள்ளத்தால் பீகாரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : 150 பேர் பலி; 60 லட்சம் பேர் வீடுகள் இழப்பு

பாட்னா: பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் 12 மாவட்டங்களை சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழையால் பீகாரில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அம்மாநித்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

560 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். வழக்கத்திற்கும் குறைவான மழைப்பொழிவை இந்த பருவகாலத்தில் பெற்றுள்ள பீகார் மாநிலத்தில் வெள்ளத்திற்கான முதன்மையான காரணம் கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கங்கை மற்றும் யமுனை நதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரு வெள்ள பாதிப்புகளை எதிர்கொண்டன. தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ளதால் அம்மாநிலங்களில் நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>