வீட்டுக்குப் போங்க; உங்க பிரச்னையைத் தீர்ப்பேன் கலெக்டர்: மு.திலிப்

IMG_20170828_113704-1_12202

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனுக்களாகக் கொடுத்தனர் . மனுவைப் பார்த்தபின், குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் என்ன பிரச்னை, என்ன காரணம் எனக்கேட்டு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினார். திடீரென்று மூதாட்டி ஒருவர் வந்து தனது பிரச்னைகளைப் புலம்பித்தள்ளினார். அவர், பல மாதங்களாக ஏதாவது பிரச்னைகள் எனக் கூறி, அடிக்கடி கலெக்டர் அலுவலகத்துக்கு வருவதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், அந்த மூதாட்டியின் குறையைக் கேட்டபின், ‘வரும் 4-ம் தேதிக்குள் உங்கள் குறைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்; கவலைப்பட வேண்டாம்’ என கலெக்டர் தெரிவித்தார். மேலும், நீங்கள் கஷ்டப்பட்டு இங்கு வர வேண்டாம்; தாசில்தாரையே உங்கள் வீட்டுக்கு வரச் சொல்கிறேன் எனக்கூறி, அவருக்கு உணவு வழங்கி போலீஸ் பாதுகாப்புடன் வழி அனுப்பிவைத்தார் .

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>