வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை

506c7444-f119-4ad9-986f-c7e54b47956c

வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை புதுப்பட்டினம் போலீசார் தீவிர விசாரனை:-
நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தான்டவன்குளம் எல்லைச்சந்து தெருவை சேர்ந்தவர் அகோரமூர்த்தி(45) கொச்சியில் கப்பல் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.இவருக்கும், சீத்தா(35) என்பவருக்கும் கடந்த 2000மாவது ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அவர்களுக்கு பதினோறு ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. இந்நிலையில் அகோரமூர்த்தி வேலைக்கு சென்றதால் சீத்தா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

நேற்று மாலை பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் பேசிவிட்டு வீட்டுக்கு சென்ற சீத்தா இன்று காலை கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.

தகவலறிந்த சீர்காழி டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் புதுப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரனை நடத்தினர். அப்போது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டிருந்ததும், சீத்தா அணிந்திருந்த 10 பவுன் செயின் கானாமல் போயிறுப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்த சீத்தாவின் உடலை கைப்பற்றிய போலிசார் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன், வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>