விஷாலுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆர்யா, பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்

2017-04-12-21-56-24

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுகிறார். அவருக்கு திரையுலகின் ஆதரவு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக விஷால் அறிவித்தார். இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் அவரது அரசியல் பிரவேசத்தை இயக்குனர்கள் சேரன், அமீர் ஆகியோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். சேரன் கூறும்போது, ‘விஷாலின் துணிச்சலை பாராட்டுவதாக சிலர் சொல்கிறார்கள். இது என்ன மல்யுத்தமா துணிச்சலை பாராட்ட? இப்படி பாராட்டி பாராட்டி தான் தமிழகம் சீர்கெட்டுபோனது.

நடிகர் சங்க பதவியிலும் இருந்துகொண்டு, தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து கொண்டு மற்றொரு பதவிக்கு ஆசைப்படுகிறார். உடனே அவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார். இயக்குனர் அமீர் கூறும்போது, ‘விஷாலுக்கு எதிராக நான் ஆர்.கே.நகரில் போட்டியிட மாட்டேன். ஆட்சியாளர்களின் அக்கிரமத்தை எடுத்துரைப்பதே என் நோக்கம். ஒரு நடிகரை எதிர்த்தெல்லாம் போட்டியிடமாட்டேன்’ என்றார்.

ஆதரவு: இதற்கிடையே திடீரென நேற்று விஜய் அப்பாவும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரனை சந்தித்து விஷால் ஆதரவு கோரினார். அதேபோல் விஷாலின் நெருங்கிய நண்பரான ஆர்யா அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் துணை தலைவராக இருக்கும் பிரகாஷ் ராஜும் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளாராம். அவரும் நடிகர் சங்க நிர்வாகிகள் சிலரும் பிரசாரத்தில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>