‘விவேகம்’ சாதனையை முறியடித்தது ‘மெர்சல்’

அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டீஸர் செய்த உலக சாதனையை விஜய்யின் ‘மெர்சல்’ டீஸர் முறியடித்து புதிய உலக சாதனை படைத்திருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்’ படத்தின் டீஸர் நேற்று (செப்டம்பர் 21) மாலை 6 மணிக்கு வெளியானது. இந்த டீஸருக்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது வரவேற்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சமீபத்தில் 5,72,000 லைக்குகளை கடந்து ‘விவேகம்’ டீஸர் உலக சாதனை பெற்றது. இதனைக் கடக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு ‘மெர்சல்’ டீஸருக்கு லைக்குகளை குவித்து வந்தார்கள். இதனால் 98 லட்சம் பார்வைகளை கடந்து சுமார் 70000 லைக்குகளை கடந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
mersal

90 விநாடிகள் – 25000, 3 நிமிடங்கள் – 50000, 7 நிமிடங்கள் – 75000, 10 நிமிடங்கள் – 1 லட்சம், 15 நிமிடங்கள் – 150000, 19 நிமிடங்கள் – 175000, 22 நிமிடங்கள் – 200000 என லைக்குகளை கடந்துள்ளது. தற்போது 704000 லைக்குகளை கடந்துள்ளது. மேலும், அதிவேக 10 மில்லியன் பார்வைகளை கடக்கும் என்று தெரிகிறது.

“நீ பற்றவைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்கும். நீ விதைத்த வினை எல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்” என்று டீஸரில் விஜய் பேசும் வசனத்தை குறிப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கிராமத்து இளைஞர், மேஜிக் நிபுணர், மருத்துவர் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் விஜய். பிரம்மாண்டமான காட்சியமைப்பு, நடனம், மேஜிக் காட்சிகள் என பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>