விநாயகர் சதுர்த்தி சிறப்பு செய்திகள்

201609051532423054_vinayagar-sathuthi-festival-trichy-malaikottai-150-kg_SECVPFதேனியில் இரு சமூகத்தினரிடையே மோதல் பதற்றம்.

தேனியில் நேற்று இரவு விநாயகர் சிலைகள் கறைப்பதில் ஏற்பட்ட சிறு பிரச்சினையில் இன்று இரு சமூகத்தை சேர்தவர்களிடையே மோதல் ஏற்பட்டதில் சரத்குமார் என்பவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமணனயில் அனுமதி.பதற்றம்.


திருச்சி – விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 1175 விநாயகர் சிலைகள் காவேரி ஆற்றில் நீர் இல்லாததால் தீயணைப்பு துறையின் வாகனத்தின் தண்ணீர் அடித்து கரைக்க பட்டு வருகின்றன – 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்


கர்நாடக மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 12 பேர் பலியாயினர். 

கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் துங்கபத்ரா நதியில் விநாயகர் சிலையை கரைக்க சென்றனர். நதியில் அனைவரும் ஒரே பரிசலில் சென்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் நிலை தடுமாறி பரிசலில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர். 8 பேர் நீச்சலடித்து கரை சேர்ந்தனர். இதில் 7 பேர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீரில் மூழ்கிய 5 பேரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். 


திருவண்ணாமலை அருகே விநாயகர் சிலை குளத்தில் கரைக்கும் போது நீரில் மூழ்கி சிறுவன் பலி திருவண்ணாமலை அடுத்த சே.அகரம் கிராமத்தை சேர்ந்த கோபி விவசாயி இவரது மகன் அசோக் (வயது 11) 5-ம் வகுப்பு படிந்து வருகிறான் இந்நிலையில் வீட்டில் இருந்த விநாயகர் சிலை கொண்டு வந்த குளத்தில் கரைக்கம்போது கால்தவறி குளத்தில் விழுந்து பரிதபமாக பலி இது குறித்து திருவண்ணாமலை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை


மேட்டூர், காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி இந்தியாஸ் என்ற இளைஞர் பலி, சேலம் கொண்டலாம்பட்டி சேர்ந்த இவர் தனது நண்பர்களுடன் விநாயகர் சிலையை காவிரி ஆற்றில் கரைக்க வந்ததாக தெரிகிறது.


வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை .வாலாஜாப்பேட்டையில் இந்துமுன்னனி சார்பாக நடத்தப்பட்ட விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் இந்து முஸ்லீம் இடையே மோதல் போலிசார் குவிப்பு


You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>