விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: வைகோ

17-1460892919-vaiko-file-600-jpg

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றம் ஜூலை 26ஆம் தேதி தந்திருக்கின்ற தீர்ப்பு இரத்தத்தால், கண்ணீரால் எழுதப்பட்ட தமிழ் ஈழ வரலாற்றில் உன்னதமான திருப்பத்தைத் தந்து இருக்கிற தீர்ப்பாகும். விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2017 ஜூலை 26 ஆம் நாள் உலகெங்கும் வாழுகிற தமிழீழ உணர்வாளர்களுக்கும், தன்மானத் தமிழர்களுக்கும் உன்னதமான திருநாள். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தகர்ந்து நொறுங்கிய நாள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றம் ஜூலை 26ஆம் தேதி தந்திருக்கின்ற தீர்ப்பு இரத்தத்தால், கண்ணீரால் எழுதப்பட்ட தமிழ் ஈழ வரலாற்றில் உன்னதமான திருப்பத்தைத் தந்து இருக்கிற தீர்ப்பாகும்.

இந்த நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டபோது, 2011 ஜூன் 1 ஆம் நாள் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த மாநாட்டில் நான் ஆற்றிய ஆங்கில உரை பிரமாண வாக்குமூலமாக தாக்கல் செய்யப்பட்டது என்று வழக்காடிய வழக்கறிஞர் கூறியபோது, என் வாழ்க்கையில் எனது பங்களிப்பும் முக்கியமான இடத்தில் அங்கீகரிக்கப்பட்டதை எண்ணி மனநிறைவு அடைகிறேன். பிரஸ்ஸல்ஸ் எனது உரையில் ஐ.நா.பொதுச்செயலாளர் அமைத்த மூவர் குழு அறிக்கையின் முக்கியமான பகுதிகளை மேற்கோள் காட்டி, பொதுவாக்கெடுப்புதான் தீர்வு என்று கூறியிருந்தேன்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க இன்னும் ஊக்கத்தோடு போராடுவதற்கு இந்தத் தீர்ப்பின் மூலம் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
மூடி மறைத்துவிடலாம்; முடிந்துவிட்டது ஈழப்போர் என்றார்கள். தற்போது புதிய பரிமாணம் எடுத்திருக்கிறது. என்றைக்காவது ஒரு நாளைக்கு அறம் வெல்லும் என்பதற்கு அடையாளமாக ஐரோப்பபிய ஒன்றியத்தின் அட்வகேட் ஜெனரலே புலிகள் மீது தடை கூடாது என்று கூறியிருக்கிறார். எனவே இந்திய அரசு தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஈழத்தமிழர் இனப்படுகொலை செய்த கொடூரக் குற்றவாளிகளையும் கூண்டில் நிறுத்தி தண்டிக்கலாம்; சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கு பொதுவாக்கெடுப்பையும் நடத்தலாம் என்ற நம்பிக்கையை லக்சம்பர்க் நீதிமன்றத்தின் தீர்ப்பு தந்து இருக்கின்றது. இவ்வாறு கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>