விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்

2016-24-9-14-51-21p

இஸ்ரேல் மற்றும் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தபோதிலும் ஐரோப்பிய யூனியனின் உச்சநீதிமன்றம், கடந்த வியாழக்கிழமை ஹமாஸ் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத தடுப்பு பட்டியலில் இருந்து நீக்குவதை உறுதி செய்தது. கடந்த 2014இல் ஐரோப்பிய யூனியனின் உயர்நீதிமன்றம் இந்த இரண்டு அமைப்புகளையும் பயங்கரவாத தடுப்பு பட்டியலில் இருந்து நீக்க மறுத்தது. இதைக் குறிப்பிட்டு வாதாடிய தலைமை வழக்கறிஞர் தற்போது இந்த தீர்ப்பை பெற்றுத் தந்திருக்கிறார். அந்த கால கட்டத்தில் ஐரோப்பிய நாடுகளோடு இஸ்ரேல் நட்புறவோடு இருந்ததையும், அக்காலக் கட்டத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு அவர் வாதாடினார்.

இதுகுறித்து பேசிய இஸ்ரேல் வெளியுறவுத்துறை செய்தியாளர் இம்மானுவல் நாஷேன், ‘இது ஐரோப்பிய நீதிமன்றத்தின் கருத்து மற்றும் விசாரணையின் ஒரு பகுதியே. மற்றபடி நீதிமன்றம் கட்டுப்படுத்தாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தொடர்ந்து ஹாமஸ் இயக்கத்தை பயங்கரவாத தடுப்பு பட்டியலில் வைத்திருக்கும் என்று நம்புகிறோம். ஹாமஸ் மற்றும் காசா இயக்கங்களைக் கட்டுப்படுத்த முப்பது ஆண்டுகளாக போராடு வருவதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசு 2014இல் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நடவடிக்கைகள் குறித்த சான்றுகளை ஐரோப்பிய ஐக்கிய நீதிமன்றத்தில் வழங்கும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த இரண்டு அமைப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்த இயக்கங்கள் மீதான பயணத்தடைகள் மற்றும் இந்த அமைப்புகளின் சொத்து முடக்கம் பற்றி குறிப்பிட்டிருந்தது. மேலும் நீதிமன்றம் தனது சொந்த விசாரணையைக் காட்டிலும் ஊடகங்களின் அறிக்கைகளைப் பெரிதாக நம்பியிருந்தாக குறிப்பிட்டிருந்தது. சொத்துகள் குறித்த வழக்குகள் மேல் முறையீட்டில் நிலுவையில் இன்னும் உறைந்துள்ளது. இந்த இரண்டு அமைப்புகளுமே அரசுடன் முறையான யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக வாதிட்டன. இந்நிலையில் ஐரோப்பிய நீதிமன்றம், பயங்கரவாத தடுப்பு பட்டியலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டன. தலைமை வழக்கறிஞர் எலினா இந்த இயக்கங்கள் பயங்கரவாத தடுப்பு பட்டியலில் வைக்க போதுமான காரணங்கள் இல்லை என்று வாதிட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>