விஜய் டிவி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விஜய் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஜய் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விவாதம் நீயா நானா நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்.22 (ஞாயிறு) ஒளிபரப்பாக உள்ள நீயாநானா நிகழ்ச்சியில் யார் அழகு? கேரளத்துப் பெண்களா? தமிழ்நாட்டுப் பெண்களா? என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருந்தது.
neeya
இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தொலைக்காட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விஜய் டிவி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். எந்தவிதமான அசம்பாவிதம் நடக்கமால் இருக்கவே இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>