விசாரனை இல்லா சட்டத்தை வழங்க வேண்டும். ஆந்திர அரசுக்கு வனத்துறை கடிதம்

triu_2366430f
 

ஆந்திராவில் சித்தூர், கடப்பா, நெல்லூர், பிரகாசம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள சேஷச்சலம், நல்லமல்ல, லன்கமல்ல வனப்பகுதியில் அறிய வகை செம்மரம் உள்ளது. இந்த செம்மரம் மருத்துவ பயன்பாட்டிற்கும் சீனாவில் வாஸ்து பொருட்களாகவும் செம்மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் வீட்டில் இருந்தால் கௌரவமாக கருதப்படுகிறது. எனவே இந்த செம்மரங்களை ஆந்திராவில் இருந்து வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக செம்மரக்கடத்தல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக இந்த கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளது. செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற வன அதிகாரிகள் ஸ்ரீதர், டேவிட் கருணாகர் ஆகியோர் செம்மரக்கடத்தல்காரர்களால் அடித்து கொல்லப்பட்டனர். இதையடுத்து வனப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினருக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் செம்மரக்கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வந்தால் வனத்துறை மற்றும் போலீசார் இணைந்த செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை ஐ..ஜி காந்தராவ் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது. இதையடுத்து அதிரடிபடையினர் செம்மரக்கடத்தலில் சர்வதேச அளவில் தொடர்புடைய கங்கிரெட்டி உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் செம்மரம் வெட்ட தமிழகத்தில் உள்ள மலை கிராமங்கள் உள்ள வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தினந்தொறும் கூலிகள் வரவழைக்கப்பட்ட ஆந்திராவில் செம்மரம் வெட்டப்பட்டு கடத்தப்படுகிறது. செம்மரம் வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை வெட்டும் பணியில் ஈடுப்படும் கூலிகளையும் செம்மரக்கடத்தல்காரர்களாகவே கருதப்படுகின்றனர்.. இந்நிலையில் செம்மரம் வெட்ட வரும் கூலிகளாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2015 ஆண்டு ஏப்ரல் 7 தேதி செம்மரம் வெட்டி வந்த கூலிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 தமிழக கூலிகள் உயிர்ழந்தனர் இருப்பினும் இந்த வழக்கில் குறைந்தளவு தண்டனை வழங்கப்படுவதால் தொடர்ந்து செம்மரம் வெட்டும் பணியில் கூலிகள் வருவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆந்திர மாநில அரசு வனத்துறை சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வரமுடியாத வகையிலும் முதல் முறை கைது செய்யப்பட்டால் 3 ஆண்டுகளும், 2 வது கைது செய்யப்பட்டால் 5 ஆண்டுகளும் 3 முறை 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கும் விதமாக சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் செம்மரக்கடத்தல் மூலம் சம்பதித்த பணம் என தெரிந்தால் அதன் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துகளை முடக்கம் செய்து ஆந்திர மாநில அரசு பறிமுதல் செய்யும் விதமாக சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 80 சதவீதம் செம்மரக்கடத்தல் குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் முற்றிலுமாக கடத்தலை நிருத்த வேண்டும் என்பதற்காக மோப்ப நாய்கள், பறக்கும் கேமிரா ( ட்ரோன் கேமிரா ) மூலம் கண்காணிக்கும் விதமாக செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படும் போலீஸ் மற்றும் வனத்துறையினர் மீது செம்மரக்கடத்தல்காரர்கள் மூலம் தாக்கப்பட்டு உயிரக்கும் ஆபத்து ஏற்படும் நேரத்தில் போலீசார் துப்பாக்கி மற்றும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எந்தவித வழக்கு விசாரனை இல்லாத வகையில் அரசு சிறப்பு உத்தரவு அளிக்க வேண்டும் என மாநில அரசுக்கு அதிரடிப்படை கடிதம் எழுதியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>