வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காததால் இளம்பெண்ணை காரில் கடத்தல்

வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காததால் இளம்பெண்ணை காரில் கடத்தல்

வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காததால் இளம்பெண்ணை காரில் கடத்தல்

ஆவடி,

வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காததால் இளம்பெண்ணை காரில் கடத்திய 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண் காரில் கடத்தல்
ஆவடியை அடுத்த முத்தாபுதுபேட்டை மேலப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவாணன். தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (வயது 27). இவர், திருநின்றவூரை அடுத்த பாக்கம் பஜாரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை அவரது அழகு நிலையத்துக்கு வந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் திடீரென சித்ராவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், மதிவாணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர், திருநின்றவூர் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார் உத்தரவின்பேரில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்–இன்ஸ்பெக்டர் சேட்டு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தல் கும்பலை தேடி வந்தனர். அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

போலீசார் மீட்டனர்
இரவு 11 மணியளவில் திருநின்றவூர் அடுத்த தாமரைப்பாக்கம் சந்திப்பில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் ஒரு பெண் அழுது கொண்டே இருந்தார்.

விசாரணையில் அவர், கடத்திச் செல்லப்பட்ட சித்ரா என்பது தெரிந்தது. அவரை போலீசார் பத்திரமாக மீட்டனர். காரில் வந்த 2 பெண்கள் உள்பட 4 பேரையும் திருநின்றவூர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>