வாகைக்குளம் கோயிலில் புரட்டாசி விழா : நேர்த்திக்கடனுக்காக தயாராகும் வண்ண வண்ண பொம்மைகள்

போலீஸ் வேலை கிடைக்க வேண்டும் என வேண்டி கொண்டு, வேலை கிடைத்தால் போலீஸ்காரர் பொம்மை, ஆசிரியர் பணி கிடைத்தால் ஆசிரியர் பொம்மை, ராணுவத்தில் பணி கிடைத்தால் ராணுவ வீரர் பொம்மை என பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவர். இந்தாண்டு பொங்கல் திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

போலீஸ் வேலை கிடைக்க வேண்டும் என வேண்டி கொண்டு, வேலை கிடைத்தால் போலீஸ்காரர் பொம்மை, ஆசிரியர் பணி கிடைத்தால் ஆசிரியர் பொம்மை, ராணுவத்தில் பணி கிடைத்தால் ராணுவ வீரர் பொம்மை என பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவர். இந்தாண்டு பொங்கல் திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

திருமங்கலம்: திருமங்கலத்தை அடுத்த வாகைகுளத்திலுள்ள அய்யனார் கருப்பசாமி கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவையொட்டி, பல்வேறு வண்ணங்களில் நேர்த்திக்கடன் பொம்மைகள் தயாராகி வருகின்றன. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள வாகைக்குளத்தில் புகழ் பெற்ற அய்யனார் கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், கோயிலுக்கு பொம்மைகளை வாங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

போலீஸ் வேலை கிடைக்க வேண்டும் என வேண்டி கொண்டு, வேலை கிடைத்தால் போலீஸ்காரர் பொம்மை, ஆசிரியர் பணி கிடைத்தால் ஆசிரியர் பொம்மை, ராணுவத்தில் பணி கிடைத்தால் ராணுவ வீரர் பொம்மை என பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவர். இந்தாண்டு பொங்கல் திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனையொட்டி வாகைக்குளம் கிராமத்தில் தற்போது பல்வேறு வகைகளில் வண்ண வண்ண பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த கிராமத்திலுள்ள கண்மாய் களிமண்ணை கொண்டு மட்டுமே இந்த பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. கருப்பசாமி, அய்யனார் உள்ளிட்ட சுவாமி சிலைகள் முதல் ராணுவ வீரர், ஆசிரியர், மின்வாரிய ஊழியர், அரசியல் கட்சி தலைவர்கள், பஸ், ரயில், டிராக்டர், டிரக், இரண்டு குழந்தைகளை சுமந்த பெண், நாகம், பூனை, எலி உள்ளிட்ட பல்வேறு வகையான பொம்மைகள் தயாரிக்கும் பணியில் இங்குள்ள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வாகைக்குளத்தை சேர்ந்த அண்ணாமலை, அருள்முருகன் கூறுகையில், ‘நாங்கள் 5 தலைமுறைகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். வாகைக்குளம் அய்யனார், கருப்பசாமி கோயிலுக்கு நேர்த்திக்கடன் நேர்ந்து கொள்ளும் பக்தர்கள் தங்களது வேண்டுதலின்படி பொம்மைகள், சிலைகள் செய்ய சொல்வார்கள். அவற்றை ஆடி 18ம் தேதி துவக்கி புரட்டாசி பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பு நிறைவு செய்வோம். பின்னர் வர்ணங்கள் தீட்டி பக்தர்களுக்கு கொடுப்போம். இந்தாண்டு ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளன. பொம்மை தயாரிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளோம்’ என்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>