வழக்குகளில் சிக்கிய வாகனங்களின் உதிரி பாகங்கள் திருடி விற்ற 2 எஸ்ஐ, ஒரு ஏட்டு டிஸ்மிஸ்

unnamed (3)

மதுரை: வழக்குகளில் சிக்கிய வாகனங்களின் உதிரி பாகங்களை திருடி விற்ற 2 எஸ்ஐகள், ஒரு ஏட்டு என 3 பேரை மதுரை எஸ்.பி.விஜயேந்திர பிதாரி பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விபத்து, திருட்டு, கொள்ளை சம்பவங்களில் சிக்கிய வாகனங்களை போலீசார் மீட்டு காவல் நிலையங்களில் குவித்து வைத்துள்ளனர். மேலூர் மற்றும் கீழவளவு காவல்நிலையங்களில் உள்ள வாகனங்களின் உதிரி பாகங்களை, போலீசார் திருடி விற்பதாக மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரிக்கு புகார்கள் வந்தன. எஸ்.பி. உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கீழவளவு போலீஸ் ஸ்டேஷன்களில் சிறப்பு எஸ்.ஐ.க்களாக பணியாற்றும் காதர்மைதீன், மாயகிருஷ்ணன் மற்றும் மேலூர் ஏட்டு அரிச்சந்திரன் ஆகியோர் உதிரி பாகங்களை திருடி விற்பனை செய்தது தெரிந்தது. விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, 3 பேரையும் எஸ்.பி. விஜயேந்திர பிதாரி நேற்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். பொதுவாக போலீஸ் தரப்பில் ஒரு குற்றத்துக்கு, சஸ்பெண்ட் நடவடிக்கைதான் எடுக்கப்படும். ஆனால், 3 பேரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘விசாரணை தொடரும்’
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் காவல்நிலையங்களில் இருக்கும் வாகனங்களில் இருந்து உதிரி பாகங்களை திருடி 2013 முதல் போலீசார் விற்பனை செய்து வந்துள்ளனர். புதிய வாகனங்களின் உதிரி பாகங்களை கழற்றி விற்றதை, அதன் உரிமையாளர்களே நேரடியாக எஸ்பியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்தே முதல்கட்டமாக 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற காவல்நிலையங்களிலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் போலீசார் குறித்து விசாரிக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>