வலை விளையாட்டு:வரலாற்றுக் கோணல்.இரா. உமா

இரா.உமா முகநூல் பதிவு
- – - – - – - – - -

 காந்தியாரின் இரட்டை நிலைப்பாட்டை துணிச்சலோடு அம்பலப்படுத்தியவர்... பெண்களுக்கான உரிமைகளுக்காக, குறிப்பாகப் பூர்விக சொத்தில் பெண்களுக்குப் பங்கு வேண்டும் எனக் குரல் கொடுத்தவர்.

காந்தியாரின் இரட்டை நிலைப்பாட்டை துணிச்சலோடு அம்பலப்படுத்தியவர்… பெண்களுக்கான உரிமைகளுக்காக, குறிப்பாகப் பூர்விக சொத்தில் பெண்களுக்குப் பங்கு வேண்டும் எனக் குரல் கொடுத்தவர்.

வரலாற்றுக் கோணல்

சித்திரை முதல் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்..அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் (ஏப்ரல் & 14). “நான் இந்துவாகப் பிறந்தேன், ஆனால் ஓர் இந்துவாகச் சாக மாட்டேன்” என்று அறிவித்து, அதன்படியே வாழ்ந்து மறைந்தவர்…சாதியை, சாதியின் வேரான இந்துமதத்தை, அதன் அடித்தளமான வர்ணாஸ்ரம மனுநீதியை அடித்துத் துவைத்துத் தொங்கவிட்டவர்.. தீண்டாமை ஒழிய வேண்டும் & ஆனாலும் வர்ணாஸ்ரமம் தழைக்க வேண்டும் என்ற காந்தியாரின் இரட்டை நிலைப்பாட்டை துணிச்சலோடு அம்பலப்படுத்தியவர்… பெண்களுக்கான உரிமைகளுக்காக, குறிப்பாகப் பூர்விக சொத்தில் பெண்களுக்குப் பங்கு வேண்டும் எனக் குரல் கொடுத்தவர்…இன்னும் இன்னும் எத்தனையோ இருக்கின்றன அண்ணல் அம்பேத்கரைப் பற்றிச் சொல்வதற்கு…

ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு அம்பேத்கர் பிறந்தநாளை எப்படி அடையாளப்படுத் தியிருக்கிறது தெரியுமா? ‘இந்த ஆண்டிலிருந்து அம்பேத்கரின் பிறந்தநாள் தேசிய தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது’ என அறிவித்திருக்கிறது. வைஸ்ராய் ஆட்சியில், 1942 & 46 காலகட்டத்தில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அம்பேத்கர் இருந்தபோது, நீர்ப்பாசனத்துறையும் அவருடைய பொறுப்பில் இருந்தது..இந்தப் புள்ளியை மட்டும் எடுத்துக்கொண்டு, அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை நீர் மேலாண்மையை வலியுறுத்துவதற்கான தினமாக்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசு.

அம்பேத்கர் பேசியதும், போராடியதும் நீர் உரிமைக்காக…தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக்குளங்களில், நீர் நிலைகளில் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காகவே அவர் போராடினார்… சௌதார் குளத்தில் தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை எத்தனை எழுச்சிகரமாக அவர் நடத்திக் காட்டினார்…சாதியை அது பாதுகாத்து வைத்துள்ள தீண்டாமையை அழித்து ஒழிக்க பல்லாயிரக்கணக்கான மக்களுடன் அண்ணல் அம்பேத்கர் நடத்திய உரிமைப் போராட்டம் அது..நேர்மையாக சிந்தித்தால், சாதி ஒழிப்பு தினமாக அண்ணலின் பிறந்தநாளை அறிவித்திருக்க வேண்டும்..ஆனால் இவை அத்தனையையும் வசதியாகப் புறந்தள்ளிவிட்டு, தனக்கு இணக்கமான சிறு புள்ளியை மட்டும் எடுத்துக்கொண்டு பா.ஜ.க. ஆடும் ‘சாணக்கிய ஆட்டம்’ இது..அம்பேத்கர் பேசியது நீர் உரிமை..மோடி சொல்வது நீர் மேலாண்மை…முன்னது போராட்டம்..பின்னது நிர்வாகம்…

மதம், சாதி, சடங்குகள், சாஸ்திரங்கள் என எந்த சட்டகத்திற்குள்ளும் தந்தை பெரியாரை யாராலும் அடக்கி விட முடியாது. அதனால்தான் இன்றுவரை சாதியாளர்களுக்கும், மதவாதிகளுக்கும் பெரியார் என்றால் எட்டிக்காயாய் கசக்கிறது…பெருநெருப்பாய் சுடுகிறது..! அதேபோல், இந்தியாவின் சமூக அரசியல் வரலாற்றில் இருந்து எவ்வகையிலும் பிரிக்கப்பட முடியாத அளவில், இருட்டடிப்புச் செய்துவிட முடியாத வகையில் தன்னுடைய ஆளுமையை, அறிவுக்கூர்மையை, அவற்றின் வழி தன்னுடைய செயல்பாடுகளை அழுத்தமாகப் பதித்துச் சென்றுள்ளார் அம்பேத்கர்…இந்துத்துவ சங் பரிவார் கூடாரங்களால் அம்பேத்கரை புறந்தள்ள முடியவில்லை..எனவே அவர்களின் பூர்விக உத்தியான உள்வாங்கிச் செரித்தலை தொடங்கியிருக்கின்றன…அதன் வெளிப்பாடுதான்…இட ஒதுக்கீடு இனி கிடையாது என அறிவித்துள்ள உ.பி.யின் யோகி அரசு, அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடுவது போன்ற காலக் கூத்துகள்…

அது சரி, காந்தியைக் கொன்ற கூட்டத்தின் வழிநடத்துதலில் ‘காந்தி தேசம்’ இருக்கும்வரை.. இன்னும் எத்தனை எத்தனை வரலாற்றுக் கோணல்களை பார்க்க வேண்டியிருக்குமோ…!

என்றும் தோழமையுடன்,

இரா. உமா 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>