வலைவிளையாட்டு

வலை விளையாட்டு:வரலாற்றுக் கோணல்.இரா. உமா

போலீஸ் ராச்சியம், மனு சாஸ்திரம், கண்டெய்னர் கோடிகள், வலைவிளையாட்டு

அந்த அடிவாங்குன தமிழன் என்ன சாதினு பாருங்கப்பா… வலை விளையாட்டு: வீணை மைந்தன்

நரி சொன்னது நாய்க்கு மட்டும் தான்! வலை விளையாட்டு:திருமாவேலன், ஜு.வி ஆசிரியர்

வலைவிளையாட்டு: ஜோதிமணி:போலி தேசபக்தி ஓடி ஒளிய இடம் தேடிக்கொண்டிருக்கிறது.

02.08.16
Vanthiya Thevan, Periyar Vinoth இன் படம் ஐப் பகிர்ந்துள்ளார்.
2 மணிகள்

11787297_1607113572911103_1025152906_n02.08.16
Vanni Arasu
7 மணிகள் ·

13872641_1044132302352457_4576044702567582110_n

நடுகல் மரபை அழிக்க சதி!
விடுதலைப்புலிகள் இல்லை என்று தெரிந்ததும் ஆளாளுக்கு கதைக்க ஆரம்பித்துவிட்டாரகள். விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று சிலர் அறிக்கை தர ஆரம்பித்தார்கள். தமிழகத்தில் கூட பிரபாகரனுக்கு பதில் நான் தான் தலைவர், அவர் தான் என்னை கட்சியே ஆரம்பிக்க சொன்னார் என்று ஏமாற்று வேலைகளை செய்து கொண்டு வரத்தான் செய்கிறார்கள்.
போர் முடிவுக்கு பின் தமிழரசு கட்சியைச் சார்நத சம்பந்தன், ஈழம் என்கிற வார்த்தையையே கைவிட்டுவிட்டார். மகிந்த ராசபக்சவிடம் சரணாகதி அடைய ஆரம்பித்தனர். அதில் முக்கியமானவர் மாவை சேனாதிராசா. இலங்கை அதிபர் மைத்ரி சிறிசேனாவின் செய்தித்தொடர்பாளர் போல இலங்கையில் செயல்பட்டு வருகிறார். அப்படிபட்டவர் மாவீரர்கள் நாளை மாற்ற வேண்டும் என்று பேசியுள்ளார். டெலோ அமைப்பின் 33வது செயற்குழு கூட்டத்தில் மாவை பேசும்போது, “இனி மாவீரர்கள் நாளான கார்த்திகை 27ஐ மாற்றி, டெலோ, ஈபிஆர்எல்எப் போராளிகளை நினைவு கூறும் வகையில், பொதுவான நாளாக மாற்ற வேண்டும்” என்று பேசியுள்ளார்.
அதாவது, சிங்கள ராணுவத்துக்கு ஒரே அச்சுறுத்தலாக இருப்பது இந்த மாவீரர் நாள் மட்டுமே! அந்த நாளில் தான் சிங்கள ராணுவமே பயந்து ஏதும் நடந்து விடக்கூடாது என்று கூடுதல் பாதுகாப்போடு திரிவார்கள். ஆகவே, அந்த நாளே இல்லாமல் போய்விட்டால் சிங்கள அரசின் ஆசையும் நிறைவேறிவிடும். அதைத்தான் மாவை மூலமாக சிங்கள அரசு செயல்படுத்த முனைகிறது. தமிழீழ விடுதலைக்காக லட்சக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக வீரச்சாவடைந்தார்கள். அன்னை பூபதி உள்ளிட்ட பொது மக்கள் சிங்கள கொடுங்கோண்மைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து தமது தாய் மண்ணுக்காக வீரச்சாவடைந்தார்கள். அப்படி இன்னமும் நடுகல்லாய் தமிழினத்தின் அடையாளமாய் இருப்பவர்களை தான் மேதகு பிரபாகரன் அவர்கள் மாவீரர்களாக வணங்கினார். அந்த மாவீரர்களில் விடுதலைப்புலிகள் மட்டுமல்ல, டெலோ உள்ளிட்ட போராளிகளையும் சேர்த்தார் மேதகு பிரபாகரன் அவர்கள். இதை செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம் போன்றவர்கள் அன்று தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களோடு இணைந்து பணியாற்றிய போதே கதைத்தது தான்.
ஆக, தேச விடுதலைக்காக வீரச்சாவடைந்த அத்தனை போராளிகளுக்குமான மாவீரர்கள் தினத்தை மாற்றுவது என்பது நமது அடையாளத்தை சிதைப்பதாகும். ஏற்கனவே, மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைத்த சிங்களம் இப்போது, தமிழர்களின் நடுகல் மரபையும் சிதைக்க முயற்சிப்பது அந்த மாவீரர்களின் தியாகத்தை சிதைப்பதாகும்.
கால் நூற்றாண்டுக்கு மேலான ஆயுதப்போராட்டத்தின் வரலாற்றுச்சுவடையே அழித்து, அடுத்த தலைமுறைக்கு நமது போராட்டத்தை, தியாகத்தை கொண்டு செல்லாமல் தடுக்கும் சதி தான். அப்படிப்பட்ட கேவலமான செயலைத்தான் மாவை போன்றவர்கள் செய்து வருகிறார்கள். வரலாறு இவர்களை ஒரு போதும் மன்னிக்காது. சிங்கள ஒடுக்குமுறைக்கெதிராக அடுத்த தலைமுறை இன்னும் கூடுதலாக போராட வருவார்கள். அப்போது, விடுதலைப்புலிகளின் போராட்டமும் தியாகமும் உலகமே போற்றும். அதுவரை இந்த மாதிரியான துரோகிகளை காலம் டக்ளஸ், கருணா போன்றோரின் கணக்கில் வைத்துக்கொள்ளும்!
வன்னி அரசு.13906863_1439369639422276_3291105673994681228_n (1)13886996_1439490402743533_3761276056981716704_n13892231_1130557213647789_8135937448954627998_n13640796_1787931798115597_393906721987437513_oவிடுதலை நாளிதழ் – Viduthalai Daily Paper
இந்தப் பக்கத்தை விரும்பு · 31 ஜூலை ·
13669190_1092827267437883_8288797749600794890_n
பதை பதைக்குதே!……..

பெண்கள் பசுவை கடத்த முயன்றதாகக் கூறி இரண்டு தலித் பெண் களை நிர்வாண மாக்கி அடித்து சித்திரவதை செய்யப்பட் டுள்ளனர்.

அரியானா (பரிதாபாத்) வில் பசு மற்றும் அதன் கன்று ஒன்றை கடத்த முயன்றதாகக் கூறி இரண்டு தலித் பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களை அடித்துத் துன்புறுத்திய காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக அதில் என்ன எழுதப்பட்டுள்ளது தெரியுமா?

இந்த இரண்டு தலித் பெண்களும் பசு மாட்டையும், அதன் கன்றையும் கடத்திச் செல்ல முயன்றனர். ஆகவே, இவர்களுக்கு இந்த தண்டனை என்று எழுதப்பட்டுள்ளது. பி.ஜே.பி. ஆட்சியில் தண்டனை வழங்கும் அதிகாரத்தை ஆர்.எஸ்.எஸ். எடுத்துக் கொண்டுள்ளதா? 

மணி மாறன். இன் இடுகை ஐ செயபிரகாசு நாராயணன் பகிர்ந்துள்ளார்.
40 நிமிடங்கள். ·
800x480_IMAGE56104357
மணி மாறன்.
நேற்று 04:06 PM மணிக்கு ·
அதிர்ச்சி தகவல்: பெண் குழந்தைகளைக் கடத்தும் ஆர்.எஸ்.எஸ்.!
அஸ்ஸாம் மாநில கிராமப்புறங்களில் வசிக்கும் அப்பாவி பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த 31 பெண் குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடத்திச் சென்றது அம்பலமாகியிருக்கிறது.
அஸ்ஸாமின் எல்லையோர மாவட்டங்கள், கோக்ரஜார், கோல்பாரா, துப்ரி, சிராங், பொங்கைகாம் ஆகியவை. பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் இந்த மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய பகுதிகள் ஆகும்.
கடந்த ஆண்டு (2015) ஜூன் மாதம் 11ம் தேதி, இந்த மாவட்டங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ராஷ்டிரிய சேவா சமிதி பிரிவும், இன்னொரு இந்துத்துவ இணை அமைப்பான சேவா பாரதி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் வந்தனர்.
அப்பாவி பழங்குடி மக்களிடம், “நீங்கள் அனைவருமே வறுமையில் உழலுகிறீர்கள்.
உங்களது குழந்தைகளை எப்படி படிக்க வைப்பீர்கள். பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம். ஆகவே உங்களது குழந்தைகளை நாங்கள் குஜராத் அல்லது பஞ்சாப் மாநிலத்துக்கு அழைத்துச் சென்று நன்றாக படிக்க வைக்கிறோம்” என்று ஆசை காட்டினர்.
இதை நம்பிய பழங்குடி பகுதி மக்கள் 31 குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருடன் அனுப்பினர். இக் குழந்தைகள் மூன்று வயது முதல் 11 வயது வரையிலானவர்கள்.
குழந்தைகளை அனுப்பி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. ஆனால் இதுவரையில், அக் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பது பெற்றோருக்குத் தெரியவில்லை. தவித்து நிற்கும் அவர்களிடம் ஆர். எஸ்.எஸ். அமைப்பு எந்தவித தகவல்கலையும் சொல்ல மறுக்கிறது.
இந்த இந்துத்துவ அமைப்புகளால் கடத்திச் செல்லப்பட்ட சிறுமிகளில் ஒருவர் பபிதா. இவரது தாய், “கடந்த வருடம், பருவமழை பெய்த நேரம். அப்போது இந்த பகுதிகளில் நண்டு நிறைய கிடைக்கும். பபிதாவுக்கு நண்டு மிகவும் பிடித்தமான ஒன்று. அவள் ஆசையுடன் கேட்டதால் சமைத்துக்கொடுத்தேன்.
அடுத்த இரண்டாவது நாள் ராஷ்டிரிய சேவா சமிதி பிரிவைச் சேர்ந்த சிலர் வந்து, “குழந்தைகளை படிக்க வைக்கிறோம்” என்று ஆசை காட்டி அழைத்துச் சென்றனர்.
இதோ, ஒரு வருடம் ஆகிவிட்டது. அஸ்ஸாமில் மீண்டும் பருவமழை துவங்கி, நண்டுகள் உலாவருகின்றன. ஆனால் பபிதா எங்கிருக்கிறாள் என்றே தெரியவில்லை. ஆர்.எஸ். எஸ். அமைப்பினரிடமிருந்தும் சரியான பதில் இல்லை!” என்று அழுகிறார் பபிதாவின் தாய்.
இந்த விவகாரம் குறித்து, புகழ் பெற்ற அவுட் லுக் பத்திரிகை விசாரணை மேற்கொண்டது.
“கல்வி தருவதாகச் சொல்லி அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சொல்ல மறுக்கிறது. பல்வேறு அரசாணைகளையும் ஆர்.எஸ்.எஸ். உதாசீனப்படுத்தி வருகிறது.
” 31 பழங்குடி பெண் குழந்தைகளையும் திருப்பி அனுப்ப வேண்டும்” என்ற அசாம் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோக்ரஜார் பகுதியில் இயங்கும் குழந்தைகள் நல கமிட்டி, மாநில குழந்தை பாதுகாப்புச் சங்கம், தில்லியில் இயங்கும் சைல்ட்லைன் ஆகிய பல அமைப்புகளும் இதே போல ஆர். எஸ். எஸ்.ஸுக்கு உத்தரவிட்டுள்ளன.
ஆனால் அனைத்து உத்தரவுகளையும் அலட்சியப்படுத்திவிட்டு, இன்னும் மவுனம் சாதிக்கிறது ஆர்.எஸ். எஸ்.!
அந்த 31 குழந்தைகளின் பெற்றோருக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்தின் கேள்வி இதுதான்:
“கடத்திச் செல்லப்பட்ட குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்., எங்கே வைத்திருக்கிறது? வைத்திருக்கிறதா இல்லையா? இல்லை என்றால் ஏன்?”

அதிர்ச்சி தகவல்: பெண் குழந்தைகளைக் கடத்தும் ஆர்.எஸ்.எஸ்.! – Bathirikai | DailyHunt
அஸ்ஸாம் மாநில கிராமப்புறங்களில் வசிக்கும் அப்பாவி பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த 31 பெண் குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்.…
M.DAILYHUNT.IN