வலைவிளையாட்டு: ஜோதிமணி:போலி தேசபக்தி ஓடி ஒளிய இடம் தேடிக்கொண்டிருக்கிறது.

1235289_10201374065145989_1648628005_n

Jothimani Sennimalai
3 மணிநேரம் ·
ஆர் எஸ் எஸ் ஐ எதிர்கொள்ளும் ராகுல்காந்தியின் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. அவர் வழக்கை எதிர்கொள்வதில் உறுதியாக இருக்கிறார். இந்த தேசம் பாலின,மத,சாதி, வர்க்கம் என்ற எவ்வித வேறுபாடும் இல்லாமல் இந்தியர்கள் அனைவருக்கும் உரிமையானது. பன்மைத்தன்மையும்,நல்லிணக்கமுமே இந்த தேசத்தின் பெருமைமிகு அடையாளம். இதுவே காந்தியின் இந்தியா . இதை எந்தச்சூழ்நிலையிலும் பிரிவினைவாத அரசியல் சேதாரம் செய்ய அனுமதிப்பதில்லை என்பதில் ராகுல்காந்தி உறுதியோடு இருக்கிறார். ஆர் எஸ் எஸ் ஐ எதிர்கொள்ளும் அவர் முடிவில் சங்கப்பரிவாரம் கலகலத்துப் போயிருக்கிறது. பழைய தேசத்துரோக வரலாறுகள் எல்லாம் இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரிந்துவிடுமே!
மோடி மத்தியில்ஆட்சிக்கு வந்தபிறகு பிஜேபி-ஆர் எஸ் எஸ் மகாத்மா காந்தி என்கிற மாபெரும் தலைவரை , மகத்தான ஹிந்துவை படுகொலை செய்த கோட்சேவை தியாகியாக சித்தரித்தனர். கோட்சேவுக்கு சிலை வைக்கும் அளவுக்கு அவர்கள் தேசபக்தி பொங்கி எழுந்தது. இன்று அனைத்து ஆங்கில தொலைக்காட்சிகளிலும் அவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் செய்த வரலாறு ,அவர்களின் தியாகத் தலைவர் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து ஆங்கிலேயரிடம் மன்னிபுக் கேட்ட வரலாறு வந்து விழுந்துகொண்டிருக்கிறது. அவர்கள் போலி தேசபக்தி ஓடி ஒளிய இடம் தேடிக்கொண்டிருக்கிறது. கோட்சே ஆர் எஸ் எஸ் காரர் அல்ல என்று பயத்தில் வெளிறிய முகங்களோடு கதறிக்கொண்டிருக்கிறார்கள்! முதல்நாளே ராகுல்காந்தி இப்படி இவர்களை இப்படி கதறவிட்டுவிட்டாரே! #தலைவர்
#ராகுல்காந்திஎஃபெக்ட்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>