வறட்சி சூழலில் தண்ணீரை வீணடித்த அரசு ஊழியா்கள் மூவரின் ஊதிய உயா்வு நிறுத்தம்

வறட்சி சூழலில் தண்ணீரை வீணடித்த அரசு ஊழியா்கள் மூவரின் ஊதிய உயா்வு நிறுத்தம்

வறட்சி சூழலில் தண்ணீரை வீணடித்த அரசு ஊழியா்கள் மூவரின் ஊதிய உயா்வு நிறுத்தம்

லடூா்: மகாராஷ்டிரா மாநிலம் லடூர் பகுதி கடந்த சில நாட்களுக்கு முன் கடும் தண்ணீா் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அப்பகுதியில் குடிநீரை வீணடித்த காரணத்திற்காக மூன்று அரசு ஊழியர்களுக்கு அவா்களின் சம்பள உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. லடூா் பகுதி மக்கள் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி குடிக்க கூட தண்ணீரின்றி தவித்து வந்தனர். அவா்களின் நிலைமையை சமாளிக்க ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு வறட்சி பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் அங்கு நிலைமை சற்று சீரடைந்ததையடுத்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி அங்குள்ள குழாய்கள் மூலம் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டது. தண்ணீா் நிரம்பியதை ஊழியா்கள் யாரும் கவனிக்காததால் சுமார் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது. இச்சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், சா்ச்சையையும் ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா், தண்ணீா் வீணானதற்கு பொறுப்பான முதல்நிலை அதிகாரி மற்றும் இரண்டு உதவி அதிகாரிகளின் சம்பள உயர்வை நிறுத்தி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>