வருமான வரி, அமலாக்கத்துறை ரெய்டுகள் மீது மேல்நடவடிக்கை

stalin1_1858179f

சென்னை: வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து, திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருமானவரித் துறை ரெய்டும், அதிமுகவிற்குள் குழப்பமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந் தைகள் போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கைகோர்த்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதிமுகவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அரிதாரம் பூசி அரங்கேறும் நாடகங்கள் இதைத்தான் உலகத்திற்கு வெளிப்படுத்துகின்றன.

நேற்றுவரை பரம விரோதிகள், முதல் குற்றவாளிகள், ஊழல் பெருச்சாளிகள் இன்று கைகோ ர்த்து, தமிழக நலன் காக்கப் போகிறோம் என்று ஊரை ஏமாற்றும் இன்னொரு அவதாரத் தை எடுத்திருக்கிறார்கள். ஹைவேஸ் புகழ் முதல்வர் எடப்பாடி அணியும், மணல் மாபியா சேகர் ரெட்டி வழிகாட்டும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் தமிழகத்தின் கஜானாவை ஜல்லிக்கரண்டி போட்டு சுரண்டி எடுத்தது போதாது என்று மீண்டும் ஒருமுறை ஊழல் ராஜ்யத்தை ஒருங்கிணைந்து நடத்த சதித் திட்டம் போடுகிறார்கள். கரூர் அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற ரெய்டு விவகாரத்தில் இன்றுவரை கண்ணாமூச்சி விளையாட்டு நடத்தப்படுகிறது. அந்த ரெய்டில் மாட்டிய ஆவணங்கள் அதிமுக அமைச்சர் களுக்கு தொடர்பு இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியும் அதற்கு மேல் ரெய்டு வளராமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடுகளிலும், சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி வீட்டி லும் நடைபெற்ற ரெய்டுகளும் என்ன ஆயிற்று என்பது இதுவரை தெரியவில்லை.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்குள் சென்று, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அவரது அறையில் அமர்ந்திருக்கும் போதே, மத்திய போலீஸ் பாதுகாப்புடன் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் அறை சோதனையிடப்பட்டது. அவரது வீடும், அவரது மகன் வீடும், அலுவலகங்களும் ரெய்டு செய்யப்பட்டன. அந்த ரெய்டு முடிந்ததும் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராமமோகன ராவ் வெளியேறினார். வருமான வரித்துறை ரெய்டின் முடிவு தெரிவதற்கு முன்பே அவர் மீண்டும் பதவியிலும் அமர்த்தப்பட்டு விட்டார். இத்தனைக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் அதுவும் அவர் போன்று தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த அதிகாரிகள் வேறு யாரும் மத்திய அரசையோ அல்லது மாநில அரசையோ அவ்வளவு துணிச்சலாக என்று சொல்வதை விட அடாவடி யாக கேள்வி கேட்டதில்லை. அப்படிப்பட்டவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டு விட்டது. தங்கக் கட்டிகள் பறிமுதல், புது நோட்டுகள் பறிமுதல், சொத்துக் குவிப்பு என்று வந்த தகவல்களோ, நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழலோ மருத்துவமனைகளுக்கு பராமரிப்பு டெண்டர் ஊழலோ மறைக்கப்பட்டு விட்டது.

தமிழக இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரண்டும் பெரும் பொறுப்பை மணல் மாபியா சேகர் ரெட்டி என்பவருக்கு தாரைவார்த்துக் கொடுத்தது தற்போது தர்ம யுத்தத்தில் முதல் கட்ட வெற்றி என்று கூறும் ஓ.பன்னீர்செல்வம் என்பது ஊருக்கே தெரியும். அவர்கள் திருப் பதியில் பொன்னாடை போர்த்திக்கொண்டு நின்ற காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபர ப்பாகி, தொலைந்து போகாமல் மனதில் காட்சிகளாக நின்றிருக்கின்றன.
ஆனால், சேகர் ரெட்டி மட்டும் திரும்ப திரும்ப கைது செய்யப்படுகிறார். சிறையில் அடைக் கப்படுகிறார். வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் விசாரிக்கும் செய்திகள் ஏடுகளில் வருகின்றன. ஆனால் அந்த விசாரணையை சேகர்ரெட்டியை தாண்டி அடுத்தகட்ட மாக உள்ள அதிமுக அமைச்சர்கள் பக்கமோ, அல்லது 6 வருடங்களாக அதிமுக ஆட்சியில் அடிக்கப்பட்ட மணல் கொள்ளைக்கு பொதுப்பணித்துறை அமைச்சராக, முதல்வராக துணை நின்ற ஓ.பன்னீர்செல்வம் பக்கமோ கொண்டு செல்வதற்கு சுதந்திரம் மறுக்கப்பட் டுள்ளதா அல்லது தடுக்கப்பட்டுள்ளதா என்ற நியாயமான கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில்தான் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் 89 கோடி வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் பண பட்டியல் கிடைத்ததாக வருமான வரித்துறை செய்தி வெளியானது. அதிமுக அம்மா அணியின் அறிவிக்கப்படாத நிதி மந்திரியாக இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை ரெய்டு நடத்தப்பட்டது. 89 கோடிக்கும் விஜயபாஸ்கர் மட்டுமே சொந்தக்காரரா அல்லது அதிமுக ஆட்சியில் கான்ட்ராக்ட், நியமனங்கள், திட்டங்கள் என்று திட்டமிட்டு, அறிவியல் பூர்வமாக வசூல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த அதிமுக ஊழல் நிதியின் ஒரு பகுதியா? என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. அந்தத் திசையை நோக்கி விசாரணையும் நகர்வது போல் செய்திகள் வரவில்லை. சுகாதார த்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடத்தப்பட்ட ரெய்டு, அதைத் தாண்டி 89 கோடி க்கு சொந்தக்காரர்கள் யார் என்ற பக்கத்தில் சென்று விடாமல் தடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் இயற்கையாக எழுந்துள்ளது.

ஆர்.கே. நகரில் கைப்பற்றப்பட்ட வாக்காளர்களுக்கான பண விநியோக பட்டியலுக்கு காரணமானவர்களை அமைச்சர்கள் உள்பட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வரை எங்கள் துணை பொதுச் செயலாளர், எங்கள் சின்னம்மா என்று துதிபாடி விட்டு, இன்று தினகரன், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்போம் என்று கூறியிருக்கிறார்கள். ஒரு ஊழலை வெளியேற்றி விட்டால், வெளியேற்ற துடிப்பவர்களின் ஊழல்கள் மறைக்கப் படும், அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்தது யார்? சுதந்தி ரமான வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ போன்ற அமைப்புகளை தங்களின் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்த முற்படுபவர்கள் யார்? ஊழல் பெருச்சாளிகளான அதிமுகவின் இரு அணிகளுக்கும் வாக்குறுதி கொடுத்திருப்பது யார் என்ற கேள்விகள் தவிர்க்க முடியாத தாகின்றன.

இந்திய அரசியல் சட்டத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தையே இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க ஒரு வாடிக்கை குற்றவாளி பயன்படுத்த முயன்றார் என்றதும் டி.டி.வி தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது டெல்லி போலீஸ். வாடிக்கை குற்றவாளி வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சட்டப்படி சரி என்றால், வருமான வரித்துறை கைப்பற்றிய 5.16 கோடி மதிப்புள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் வசூல் பட்டியல் ஆர்.கே.நகரில் கைப்பற்றப்பட்ட ₹ 89 கோடிக்கான பண விநியோக பட்டியல் அடிப்படையில் இதுவரை ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? ஏன் யாரும் கைது செய்யப்படவில்லை? வாடிக்கை குற்றவாளி சொல்லும் வாக்குமூலத்தை விட வருமான வரித்துறை கைப்பற்றிய பட்டியலுக்கு எப்.ஐ.ஆர் போடும் சக்தி அதிகம் இல்லையா? அவர்களை எது தடுக்கிறது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தில் குறுக்கிடும் நடவடிக்கையில் எப்.ஐ.ஆர், இன்னொரு நடவடி க்கையில் அமைதி என்பது அதிமுகவிற்குள் நடக்கும் அடிதடிகளில், கூத்துக்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.

ஆகவே அதிமுகவில் முன்பு பெரா அணிக்கு ஆதரவாக இருந்துவிட்டு ஹைவேஸ் ஊழல் புகழ் அணியாக இருந்தவர்களும் சரி, மணல் மாபியா சேகர் ரெட்டியின் ஓ.பி.எஸ் அணி யாக இருந்தவர்களும் சரி இருவரும் இணைந்து கரம் கோர்த்து தமிழக அரசின் கஜானாவை கடந்த 6 வருடங்களாக கொள்ளையடித்தவர்கள்தான். ஒவ்வொரு ஊழலையும் இவ்வாறு செய்து, தமிழகத்தை 5 லட்சம் கோடி கடனில் மூழ்க வைத்த பெரும் பாவத்தை செய்தவர்கள்தான் இவர்கள். இரு அணியினருமே முதல்வர் ஜெயலலிதாவின் நலனுக்காகவும், அவரது மரணத்தில் நியா யம் கிடைக்கவும் போராடுகிறோம், தர்ம யுத்தம் நடத்துகிறோம் என்று பகட்டாகப் பேசுவது பகல் வேஷம். தமிழக மக்களை இன்னும் ஏமாற்றி மாநிலத்தை மேலும் சுரண்டி அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்த அடுத்தகட்ட அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.
ஆகவே திமுக சார்பில், ‘ஆண்டது போதும். தமிழகம் காப்பற்றப்பட வேண்டும்’ என்று அதிமுகவின் இரு அணிகளையுமே நான் எச்சரிக்க விரும்புகிறேன். இரு அணிகளிலும் உள்ள அதிமுக அமைச்சர்கள் மீதும், அவர்களின் ஊழல்களுக்கு கைநீட்டி துணை போன அதிகா ரிகள் மீதும், மணல் மாபியாவுடன் தொடர்புடைய அமைச்சர்கள், ஆர்.கே.நகர் வாக்காளர் களுக்கு 89 கோடி கொடுத்து தேர்தல் ஆணையத்தை நிலைகுலைய வைத்த அதிமுக அமைச்சர்கள், முதல்வர் ஆகியோர் மீது இதுவரை நடைபெற்றுள்ள வருமான வரித்துறை ரெய்டுகள் அனைத்திலும் கண்டறியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ஒளிவுமறை வற்ற வெளிப்படையான மேல் நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

தற்போதைக்கு அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்தினால் மட்டும் போதும், அவர்களின் ஊழல் பற்றியோ தமிழக நலன் பற்றியோ நமக்கு என்ன கவலை, அதிமுகவின் ஊழல் ஆட்சி ஏதாவது ஒரு வடிவத்தில் இன்னும் நீடித்து தமிழகத்தின் எதிர்காலம் பாழாகட்டும் என்று நினைத்து; ஒட்டுமொத்த அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை கூண்டோடு வெளிச்சத் திற்கு கொண்டு வரும் புனிதப் பணியில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>