வந்தவாசியில் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு உண்ணாவிரதம்

வந்தவாசியில், அரசு தொடக்கப் பள்ளி மாணவி அபிநயா மரணத்திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பட்டினி போராட்டம்-மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.-100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆர்.சி.எம். பள்ளி வளாகத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டார அளவில் பள்ளி, மாணவ, மாணவியருக்கான கலைத்திருவிழா நவ.30ம் தேதி முன்தினம் நடந்தது. குழு நடனம், தனி நபர் நடனம், திருக்குறள் ஒப்புவித்தல், கவிதை, பேச்சு, மேளம் வாசித்தல், மெல்லிசை உள்பட, 24 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில், வந்தவாசி டவுன் காமராஜர் நகரை சேர்ந்த ரங்கன் மகள் அபிநயா, 10, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர், நடனக்குழு போட்டியில் பங்கேற்று, நடனமாடி கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய நோய் பாதிப்பு இருந்ததை, டாக்டர்கள் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>