வதந்திகளை தடுக்க ஜெ., சிகிச்சை பெறும் படத்தை வெளியிட கருணாநிதி வலியுறுத்தல்​

2016-30-9-13-58-20km

சென்னை: தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்குமாறு தி.மு.க தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழு உடல் நலம் பெற வேண்டும் என்பது தமது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் முதல்வர் குறித்து தினந்தோறும் வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நிர்வாகத்தை ஆளுநர் ஏற்க கோரியுள்ளார்.

மருத்துவமைனயில் ஜெயலலிதாவை அதிகாரிகள் சந்தித்த படத்தை ஏன் வெளியிடவில்லை என்று கருணாநிதி வினவியுள்ளார். தலைமை செயலகத்தில் முதல்வர் – அதிகாரிகள் சந்திப்பு புகைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி மேற்கண்டவாறு வினவியுள்ளார்.

எனவே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கின்ற புகைப்படம் ஒன்றை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த குழப்பங்களை போக்க மருத்துவமனை சந்திப்பை புகைப்படமாக வெளியிட யாரும் முன் வரவில்லையே என குறிப்பிட்டுள்ளார்.

முதலர்வர் உடல்நிலை பற்றிய செய்தியை மூடுமந்திரமாக வைத்துள்ளதால் வதந்திகள் பரப்பபடுவதாக குறிப்பிட்டுள்ளார். வதந்திகளை தடுக்க ஜெயலலிதா சிகிச்சை பெறும் படத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பற்றி சுகாதார அமைச்சரோ, தலைமைச் செயலரோ அறிவிப்பு தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

1984-ல் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்ற போது சுகாதார அமைச்சர் ஹண்டே தினமும் அறிக்கை தந்தார். மருத்துவமனை சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ஜெயலலிதாவை சந்தித்ததாக செய்தி இல்லை.

முதல்வரை இதுவரை யாரும் சந்திக்கவில்லை என்று அதிமுக அவைத்தலைவரும் சொல்லி இருக்கிறார். வதந்திகளை உண்மை என நம்பி அதிமுக தொண்டர்கள் வேதனையில் உள்ளனர்.

எனவே வதந்திகளுக்கு முடிவு கட்ட தமிழக அரசு, முதல்வர் உடல்நிலை பற்றிய தகவலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழு பற்றி நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும் என்றார். அரசியல் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>