வட கொரியாவுடன் போர் வரலாம் : சி.ஐ.ஏ.மு.திலிப்

201708140039348991_North-Korea-No-imminent-threat-of-nuclear-war-says-CIA_SECVPF

வாஷிங்டன்: ‘வட கொரியாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு, தற்போது அதிகம் உள்ளது’ என, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான, சி.ஐ.ஏ.,யின் உயர்அதிகாரி தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி, கிழக்காசிய நாடான வட கொரியா, அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஐ.நா., பொருளாதார தடை விதித்த பின்னும், அணு ஆயுதத் தயாரிப்பை வேகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தாக்குவோம் என்றும் வடகொரியா மிரட்டி வருகிறது.

இது தொடர்பாக, அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான, சி.ஐ.ஏ., யின் இயக்குனர் மைக் போம்பியோ, ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையில், வட கொரியா உடனடியாக தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட, போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு தற்போது அதிகம் உள்ளது.

மிகவும் முரட்டுத்தனமான தலைவராக, வட கொரியாவின் அதிபர், கிம் ஜாங் உன் செயல்பட்டு வருகிறார்.அதனால் தான், வட கொரியா அணு ஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போர் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

நாட்டு மக்களுக்கு எந்த அபாயமும் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் அதிபர், டிரம்ப் ஈடுபட்டுள்ளார். அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்தும்படி, வட கொரியாவை நிர்ப்பந்திக்க வேண்டுமென, அதன் நட்பு நாடான, சீனாவை வலியுறுத்தியுள்ளார்.அவரது முயற்சியால், இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

வட கொரியாவால், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியாவுக்கு மட்டும் ஆபத்தல்ல; உலக நாடுகளுக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என்பதை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>