வட இலங்கையில் ஆர்ப்பாட்டம், பேரணி

160830075819_triconamalee_640x360_bbc_nocredit

இலங்கையின் வடக்கே காணாமல் போனோருக்கான சர்வதேச தினத்தையொட்டி பல நகரங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டங்களும், பேரணியும், கவன ஈர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
160830110532_srilanka_international_day_for_enforced_disappearances_640x360_bbc_nocredit
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன.
காணாமல் போனோரின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள். நல்லிணக்கச் செயலணியைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் இவற்றில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் அரச செயலகத்தில் இருந்து ஐநா அலுவலகம் வரையில் பேரணி நடத்தப்பட்டு, பேரணியில் கலந்து கொண்டவர்களினால் அந்த அலுவலக அதிகாரிகளிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
160830110431_srilanka_international_day_for_enforced_disappearances_640x360_bbc_nocredit
தேசிய நல்லிணக்கத்துக்கான பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணிக்கு எழுதப்பட்ட இந்த மகஜர் ஏனைய இடங்களிலும், அந்த செயலணி உறுப்பினர்களிடமும் முக்கியஸ்தர்களிடமும் கையளிக்கப்பட்டுள்ளன.
160830081638_batticolaslmiss_640x360_bbc_nocredit
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறைகளே அவசியம் என அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
அத்துடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கும் ஏனைய சாட்சிகளுக்கும் இவ்விடயம் சார்ந்து செயற்படும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டிருக்கின்றது.
160830110944_srilanka_international_day_for_enforced_disappearances_640x360_bbc_nocredit
நிலைமாறுகால நீதி முன்னெடுப்புக்கள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்படுவதற்கு அரச வன்முறைப் பொறிமுறைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு ஐநா இலங்கையின் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புக்களில் இணைப் பங்காளியாக வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>