வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : தலைநகர் டெல்லியில் 140 விமானம் தாமதம்; 13 ரயில்கள் ரத்து

2016-03-12-13-00-48

புதுடெல்லி: வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தலைநகர் டெல்லியில் உறைபனி காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. டெல்லியில் இரவில் தொடங்கும் பனி காலை 10 மணி வரை நீடிப்பதால் நகர் முழுவதும் பனித்திரை சூழ்ந்தது போல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய பகுதியில் உறைபனி சூழ்ந்ததால் 140-க்கும் அதிகமான விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமானது.

இதே போல் டெல்லியில் இருந்து புறப்படவேண்டிய 13 ரயில்கள் இரவு ரத்து செய்யப்பட்டன. வாரணாசி, கான்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடும் பனி நீடிப்பதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. உத்தரபிரதேசத்தில் உள்ள மொரதாபாத்தில் ரயில்வே தண்டவாளத்தில் உறைபணி காரணமாக விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வடமாநிலங்களில் வழக்கத்தை விட பனிமூட்டமும் அதிகளவில் குளிரும், பனிமூட்டமும் அதிகளவில் உள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>