வசூல் ஏஜென்ட் மீது கடும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

கல்விக் கடனை உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தேசியமயமாக்கப்பட்ட வங்கி கொடுத்த துன்புறுத்தல் தாங்க முடியாமல் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை செய்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

வங்கி அதிகாரிகளின் இந்த கெடுபிடி வசூல் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாணவனை இழந்து தவிக்கும் அவரது பெற்றோருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தனியார் வசூல் ஏஜென்ட் மாணவர் லெனினை மிரட்டி, அவருடைய மதிப்பெண் சான்றிதழ்களையும் பறித்துச் சென்றுள்ளார். மாணவர்கள் தங்களின் எதிர்காலமாக கருதப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை தேசியமயமாக் கப்பட்ட வங்கியின் வசூல் ஏஜெண்டுகள் பறித்தது கொடூரச் செயலாகும்.

தமிழகத்தில் இப்படி அத்துமீறி நடந்து கொள்ளும் வசூல் ஏஜெண்டுகள் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வசூல் ஏஜென்ட் மீது கடும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

ஆட்சிப் பொறுப்பேற்றதும் 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கையெழுத்திட்ட முதல்வர் ஜெயலலிதா, இந்த மாநிலத்தின் எதிர்காலமாக கருதப்படும் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை

அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் காட்டிய அலட்சியத்தால் மதுரை அவுனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

ஆகவே இனியும் தாமதம் செய்யாமல் மாணவர்களின் கல்விக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். லெனின் மரணத்திற்கு காரணமான குறிப்பிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி இனி வசூல் ஏஜென்டுகளை வைத்து மாணவர்கள் கடனை வசூல் செய்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Blue Colour

திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில், 16 ஆயிரத்து 440 மாணவர்களுக்கு ரூ.6 கோடியே 35 லட்சம் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக, திருப்பூரில் நடைபெற்ற உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை சார்பில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா, திருப்பூரில் நேற்று நடந்தது. இதில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலின், 280 மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது: கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில் இளைஞரணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அன்றுமுதல் 8வது ஆண்டாக 10, பிளஸ்-2 பொதுதேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 4,577 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 48 லட்சத்து 58 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 280 மாணவர்களுக்கு ரூ.31 லட்சத்து 15 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 8 ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்து 589 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 55 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கல்வி ஊக்கத் ெதாகை மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மொத்தம் 16,440 மாணவர்களுக்கு ரூ.6 கோடியே 34 லட்சத்து 73 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு இந்த நிதியை வழங்குவதில் நாங்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.

தேர்தலுக்கு முன்புகூட மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. ஆனால், அதை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு மாணவர்கள் நலனுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். மாணவர்களின் பிரச்னைகளுக்காக திமுக தொடர்ந்து போராடும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>