லஷ்கர் அமைப்பின் தளபதி அபுதுஜானா சுட்டுக்கொலை

2017-02-08-02-42-20

: காஷ்மீரில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதி அபுதுஜானா உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹக்ரிபோரா பகுதியில் தீவிரவாதி அபுதுஜானா மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கிராமத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அங்குள்ள வீடு ஒன்றில் தீவிரவாதி அபுதுஜானா மற்றும் அவனது கூட்டாளிகள் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதிலி் லஷ்கர் அமைப்பின் தளபதி அபுதுஜானா மற்றும் கூட்டாளி அரீப் லிஹாரி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த வீட்டிற்குள் மேலும் தீவிரவாதிகள் அங்கு பதுங்கி இருக்கலாம் என்பதால் வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதி அபுதுஜானா தனது மனைவியை பார்ப்பதற்காக கிராமத்துக்கு வந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மற்றும் தெற்கு காஷ்மீரில் அரசியல்வாதிகள் மீது நடத்தப்பட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் லஷ்கர் இ தொய்பா தளபதி அபுதுஜானா தொடர்புடையவன். அபுஜானா தலைக்கு காவல்துறை ரூ.10லட்சம் பரிசு அறிவித்திருந்தனர். இந்நிலையில் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டு பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது வீரர்கள் கண்ணீர் புகை குண்டு , தடியடி நடத்தினார்கள். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த பிர்தோஸ் அகமது மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>