லதா ரஜினிகாந்திற்கும் கடைக்கும் தொடர்பு இல்லை

சென்னை ஆழ்வார்பேட்டையில் மாநகராட்சி கடைகளுக்கும் லதா ரஜினிகாந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கடைகள் நடத்தி வருபவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 10 கடைகள் லதா ரஜினிகாந்த் பெயரில் உள்ளது. இந்த கடைகளில் தொழில் செய்து வந்த லதா ரஜினிகாந்த் 20 ஆண்டுகளுக்கு முன்பே கடையை காலி செய்துவிட்டதாகவும் இந்த கடையில் வெவ்வேறு நபர்கள் 20 ஆண்டுகளாக தொழில் செய்து வருவதாகவும் ஷில்பி கடை உரிமையாளர் நளினி கூறுகின்றார். Latha-Rajini_jakkamma

இந்த கடைக்கும் லதா ரஜினிகாந்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த கடைக்கு 20 ஆண்டுகளாக லதா ரஜினிகாந்த் பெயரில் நாங்கள் தான் வாடகை தருகிறோம். லதா ரஜினிகாந்த் பெயரில் உள்ள கடையை தங்கள் பெயருக்கு மாற்றித் தரக்கோரி பல ஆண்டுகளாக போராடியும் செய்துத்தரவில்லை. எனவே நாங்கள் அனைவரும் லதா ரஜினிகாந்த் பெயரிலேயே வாடகை தந்து வந்தோம் என கடை உரிமையாளர் மோகன் மேனன் விளக்கம் அளித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>