லண்டனில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

201707101054459396_There-are-more-than-1000-shops-and-stalls-at-the-Camden_SECVPF

லண்டனில் உள்ள கேம்டன் மார்க்கெட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தால் சந்தையில் உள்ள ஒரு கட்டிடத்தின் 1 வது, 2 வது மற்றும் 3 வது மாடிகள் மற்றும் கூரையும் தீயில் சேதம் அடைந்தது.இந்த மார்க்கெட் பல்வேறு கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளை உள்ளடக்கிய ஒரு பிரபலமான சுற்றுலா பகுதியாகும்.ஒரு வருடத்திற்கு 28 மில்லியன் மக்கள் இந்த மார்க்கெட்டை பார்வையிடுவதற்கு வந்து செல்கின்றனர் என புள்ளியில் விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மார்க்கெட்டில் 1,000 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த விபத்தில் யாரேனும் காயமடைந்துள்ளார்களா? அல்லது உயிரிழந்துள்ளார்களா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தீ பரவும் என்ற அச்சம் காரணமாக அருகில்இருந்த வீடுகளிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தற்போது, 70 தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாரத்தில் இது இரண்டாவது தீவிபத்து சம்பவமாகும். கடந்த மாதம் லண்டனில் உள்ள கிரென்பெல் தீவிபத்தில் 80 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>