ரூ.72 கோடி மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து கைது

எஸ்.ஆர்.எம் கல்விக்குழும நிறுவனர் பச்சமுத்துவிடம் நேற்று இரவு முதல் விடிய விடிய தீவிர விசாரனை தற்போதுவரை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் இன்று எந்நேரமும் கைது செய்யப்படலாம்

ரூ.72 கோடி மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன தலைவர் பச்சமுத்து கைது

சென்னை: எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் தருவதாக மாணவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த விவகாரத்தில், கல்லூரி வேந்தர் பச்சமுத்துவிடம் போலீசார் நேற்று விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன் கடந்த மே மாதம் திடீரென தலைமறைவானார். முன்னதாக மதன், தான் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் வசூலித்த பணம் முழுவதையும், பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டதாக கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் மாயமான தன் மகன் மதனை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி பல மாணவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி மோசடி செய்ததாக மதன் மீது புகார் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது வரை 112 மாணவர்களிடம் ரூ.72 கோடிக்கும் மேல் வாங்கி மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதன் காணாமல் போன வழக்கு, அவர் மீதான மோசடி வழக்குகள் ஆகியவை குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை அதிகாரிகள் விசாரணை அறிக்கையை கோர்ட்டில் அவ்வப்போது தாக்கல் செய்து வருகின்றனர். கடந்த 17ம் தேதி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், போலீசாரின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். வழக்கை தமிழக போலீசாரால் திறம்பட விசாரிக்க முடியவில்லை என்றால், வழக்கை வேறு ஒரு புலன் விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்று கெடு விதித்தனர். இந்த நிலையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவை நேரில் ஆஜராகும் படி தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்த நிலையில் நேற்று அவர் சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ஆஜரானார். அங்கு அவரை தனி அறையில் வைத்து கூடுதல் துணை கமிஷனர், 3 உதவி கமிஷனர்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழுவினர் தலைமையில் விசாரணை நடந்தது. பச்சமுத்துவிடம் விசாரணை நடத்துவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பச்சமுத்துவிடம் விசாரணை நடத்தும் விஷயம் வெளியே கசிந்தது. இதையடுத்து விசாரணை நடைபெற்ற பழைய கமிஷனர் அலுவலக நுழைவு வாயில் அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். அலுவலகத்தில் நுழைய பத்திரிகையாளர்கள் உள்பட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

300 கேள்விகள்: மருத்துவ சீட்டுக்காக பச்சமுத்துவை மாணர்வர்கள், பெற்றோர் அணுகினால், அவர் மதனை பார்க்கும் படி அனுப்பி வந்தார். மாணவர்களிடம் பணம் வாங்கி மதன் மோசடியில் ஈடுபட்டாலும் அதற்கு முழு காரணமாக பச்சமுத்து தான் இருந்துள்ளார். இதனால், பச்சமுத்துவிடம் இருந்து பணத்தை பெற்று தருமாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் போலீசிலும், கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாகவும் போலீசார், பல்வேறு கேள்விகளை கேட்டு பச்சமுத்துவை திணறடித்தனர். குறிப்பாக மாணவர்களிடம் வசூலித்த சுமார் ரூ.72 கோடி பணம் எங்கே. மதனை எங்கு மறைத்து வைத்துள்ளீர்கள் என அடுத்தடுத்து 300 கேள்விகளை போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த தொடர் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய அவர், சில கேள்விகளுக்கு மவுனம் சாதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 2-வது நாளாக தொடர்ந்த விசாரணையில் பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>