ரூ.50 கோடியில் கால்வாய்கள் சீரமைக்க திட்டம் : ஜெயலலிதா அறிக்கை

ரூ.50 கோடியில் கால்வாய்கள் சீரமைக்க திட்டம் : ஜெயலலிதா அறிக்கை

ரூ.50 கோடியில் கால்வாய்கள் சீரமைக்க திட்டம் : ஜெயலலிதா அறிக்கை

பேரவையில் நேற்று 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை படித்தார். அது வருமாறு:

* மேட்டூர் கிழக்குகரை கால்வாயின் எல்.எஸ். 45.30 கி.மீ. முதல் எல்.எஸ். 58 கி.மீ. வரை, ரூ.25 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். சேலம் மாவட்டம், மேட்டூர் மேற்குகரை கால்வாயின் எல்.எஸ். 7.283 கி.மீ. முதல் எல்.எஸ்.13.92 கி.மீ. வரை ரூ.25 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

* ஈரோடு மாநகருக்குள் செல்லும் காளிங்கராயன் வாய்க்காலின் பகுதிகளில் கான்கிரீட் லைனிங் பணிகள் அமைத்தல் மற்றும் பேபி வாய்க்கால் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.36 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* ஓமலூர் மற்றும் சேலம் மேற்கு பகுதிகளில் உள்ள 6 அணைக்கட்டுகள், அதன் கால்வாய்கள் மற்றும் 10 ஏரிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்படும்.

* வராகநதியை சீர் செய்து தூய்மைபடுத்தும் வகையில், ரூ.15 கோடி மதிப்பீட்டில், ஆற்றின் இரு புறமும் வெள்ளத் தடுப்பு சுவர் அமைத்து அதன்மூலம் கரைகள் பலப்படுத்தப்படும்.

* சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி அருகே, வைகை ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும்.

* திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 ஏரிகள், தர்மபுரி மாவட்டத்தில் 7 ஏரிகள், வேலூர் மாவட்டத்தில் 12 ஏரிகள், விருதுநகர் மாவட்டத்தில் 22 ஏரிகள் என 49 ஏரிகள் ரூ.22 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் இந்த ஆண்டு புனரமைக்கப்படும்.

* திருச்சியில் உள்ள பொதுப்பணி பணியாளர் பயிற்சி நிலையத்திற்கு விரிவுரையாளர் அரங்கம் மற்றும் பல்நோக்கு அரங்கம் உள்ளடக்கிய புதிய கட்டிடம் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>