ரூ.1590-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: வோடபோன் அறிமுகம்

201712201008277539_Vodafone-Launches-Itel-A20-Smartphone-at-Rs-1590_SECVPF

புதுடெல்லி:

சீனாவின் டிரான்சியன் குழும நிறுவனங்களின் ஐடெல் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து வோடபோன் இந்தியா புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளன.

ஐடெல் A20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1590 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் உண்மை விலை ரூ.3690 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் வோடபோன் நெட்வொர்க் தேர்வு செய்து மூன்று ஆண்டுகளுக்கு இதே சேவையை பயன்படுத்த வேண்டும்.

முன்னதாக வோடபோன் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்கள் இணைந்து ரூ.2,200 விலையில் பாரத் கேன்வாஸ் சீரிஸ் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. முந்தைய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் வாங்கும் போது அறிவிக்கப்பட்ட கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

அந்த வகையில் ஐடெல் A20 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.150க்கு 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த ரீசார்ஜ்களை ஒரே முறையும் அல்லது பல்வேறு கட்டங்களிலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 18 மாதங்கள் நிறைவுறும் போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.900 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதே போன்று அடுத்த 18 மாதங்களில் ரூ.1200 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

வோடபோன் வழங்கும் கேஷ்பேக் தொகையை எம்-பேசா வாலெட் கணக்கில் சேர்க்கப்படும். இதை கொண்டு ரீசார்ஜ், கட்டணங்கள், பண பரிமாற்றம் அல்லது பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் வோடபோன் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதோடு அவர்களை எம்-பேசா சேவையை பயன்படுத்த செய்ய முடியும். வோடபோன் மற்றும் ஐடெல் A20 ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் சேவை மார்ச் 31, 2018 வரை வழங்கப்படுகிறது.

ஐடெல் A20 சிறப்பம்சங்கள்:

- 4.0 இன்ச் 800×480 பிக்சல் WVGA டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- மாலி-400 MP2 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
- டூயல் சிம்
- 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
- 0.3 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 1700 எம்ஏஎச் பேட்டரி

இந்தியாவில் ஐடெல் A20 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு, டார்க் புளூ மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது.

வோடபோன் மட்டுமின்றி பாரதி ஏர்டெல் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்கள் இணைந்து இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் N1 ஸ்மார்ட்போனினை ரூ.1,649 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>